இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரில் பங்கேற்றுள்ள பல வீரர்கள், இந்தியாவில் தற்சமயம் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுப் பரவல் தீவிரநிலை காரணமாக போட்டியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார்கள்.

அதன்படி, அவுஸ்திரேலியாவின் கேன் ரிச்சர்ட்ஸன் மற்றும் எடம் சம்பா ஆகியோர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளனர். அதேபோல், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடிய அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் அன்றூ டை, நேற்றைய தினம் தாய்நாடு திரும்பினார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளரான டேவிட் ஹஸி, தமது தீர்மானம் குறித்து ஓரிரு தினங்களில் அறிவிக்கவுள்ளார்.

டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (Siyane News)

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.