இன்று ஒரு சீன தடுப்பூசி பற்றி பேசப்படுகிறது. தேசிய ஔதட கட்டுப்பாட்டு சபை ஒரு சுயாதீன அமைப்பு. ஆனால் முன்னர் நியமிக்கப்பட்ட பேராசிரியர்களை அகற்றி இந்த அரசாங்க  நிபுணர்களை சேர்த்த பிறகும் அது சீன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.உலக சுகாதார ஸ்தாபனமும் அனுமதியளிக்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இன்றைய தினம் (01) எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

 ஊடகங்களுக்கு பொறுப்புள்ளது.இலவசமாக கிடைத்ததால் சீன தடுப்பூசியை பயன்படுத்த இலங்கை மருத்துவ சங்கம் அனுமதி வழங்கியுள்ளது.இது ஒரு அற்புதமான கதை. ஆரம்பத்தில் எதிர்த்த மருத்துவ சங்கம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.விஷம் இலவசமாக கிடைத்தாலும், அதுவும் மக்களுக்கு வழங்கப்படுமா? 

எஸ்ட்ரா செனிகா கொவிஷிலிட் தடுப்பூசியின் தகுதி காலம் கூட இன்னும் நிறைவடையவில்லை.அவ்வாறு இருக்க சீன தடுப்பூசிக்கு அதன்  ஆரம்ப பரிசோதனை அங்கீகாரமும் கிடைக்க முன்னர் இவ்வாறு இலவசம் என்பதற்காக மக்களுக்கு வழங்க முடியுமா? என கேள்வி எழுப்பினார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.