களுத்துறையில் பெய்துவரும் கடும மழைக் காரணமாக அங்குள்ள 7 பிரதேசசெயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில பிரதேசங்களுக்கு வௌ்ளப்பெருக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

புலத்சிங்கள, பாலிந்த நுவர, அகலவத்த, வளல்லாவிட்ட, இங்கிரிய, மதுகம, தொடங்கொட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை நில்வலா, ஜின், களுகங்கை ஆகியவற்றின் நீர்மட்டங்கள் அதிகரித்துள்ளதால், புளத்சிங்கள, பாலிந்த நுவர, மீல்லெனிய, ஹோரன, தொடங்கொட ஆகிய பிரதேசங்களில் வௌ்ளப்பெருக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கடற்படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குத் தயாராக உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

(Tamil Mirror)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.