நேற்று (13) பெய்த கடும் மழை காரணமாக கஹட்டோவிட்டாவின் அத்தனகல்ல ஓயா பெருக்கெடுத்துள்ளதால் ஆற்றின் அருகாமையில் உள்ள ஹிஜ்ரா மாவத்தை கஹட்டோவிட்ட பிரதான சந்தி போன்ற தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
எனவே இந்த பகுதியில் வாழும் குடும்பங்களுக்களுக்கு காலை உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு ஊர்ப்பள்ளிவாசல்களில் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 175 பேருக்கு காலை உணவு அதாவது பெருநாள் காலை உணவை ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் ஒரு பார்சலை காலை 7.45இற்கு முன்பதாக கஹட்டோவிட்ட முஹிய்யத்தீன் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு அருகாமையில் கொண்டு வந்து ஒப்படைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
பெருநாள் தினத்தில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள நமது சகோதர சகோதரிகளுக்கு இப்பெருநாள் தினத்தில் ஏனையவர்களும் சந்தோஷமாக சாப்பாடு உட்கொண்டு இருப்பதை போல அவர்களுக்கும் உங்கள் வீடுகளில் இருந்து காலை சாப்பாட்டை வழங்குமாறும் தண்ணீர் போத்தல்களில் நீர் நிறைத்து கொண்டு வந்து ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
நன்றி - Kahatowita News Page Official