-பிரதீபன்-

2020 ஆம் ஆண்டு க.பொ.த. உயர் தரப் பரீட்சையில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

அவரது Z புள்ளி 2.9422 ஆகும். அவர் தேசிய நிலையிலும், யாழ்ப்பாணம் மாவட்ட நிலையிலும் முதலிடம் பெற்று வரலாற்றுப் பதிவு செய்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு க.பொ.த. உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (04) வெளியிடப்பட்டன. அதன் அடிப்படையில் ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 297 மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்கு அனுமதி பெறத் தகுதி பெற்றுள்ளனர்.

அதன்படி, புதிய பாடத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 78 ஆயிரத்து 337 மாணவர்களும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் 15 ஆயிரத்து 960 மாணவர்களும் பல்கலைக் கழகங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.