துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் சில உறுப்புரைகள் அரசியலமைப்புக்கு முரணாக உள்ள​தென உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அரசியலமைப்புக்கு முரணாக உள்ள உறுப்புரைகளை திருத்தம் செய்தால் அல்லது வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றினால் அச்சட்டமூலத்தை செல்லுபடியாக்க முடியும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே அவற்றுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு தேவையாக இருப்பதால், குறித்த உறுப்புரைகள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன  இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ த சில்வா, தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Tamil Mirror)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.