அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய சதொச நிவாரணப் பொதியை விநியோகிக்கும் இரண்டாவது கட்டம் இன்று (02) ஆரம்பிக்கப்படவுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாடு பூராகவும் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் இதனைக் கொள்வனவு செய்யமுடியும். தரமான பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவது இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

கடந்த காலங்களில் விநியோகித்த நிவாரணப் பொதியை விட இம்முறை மேலும் சில பொருட்கள் பொதியில் உள்ளடக்கப்பட்டுள்ளன. சம்பா அரிசி, நாட்டரிசி என்பன தலா ஒரு கிலோ இதில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

(Siyane News)

அரசாங்க தகவல் திணைக்களம்கருத்துரையிடுக

Blogger இயக்குவது.