அரச வைத்தியசாலைகளில் உரிய சேவைகள் கிடைக்காவிட்டால் அது குறித்து சுகாதார அமைச்சுக்கு அறிவிக்குமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் நோயாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா வைரசு தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சில நோயாளர்களுக்கு சில வைத்தியசாலைகளில் முறையான சிகிச்சைகள் வழங்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு தேவையான மருந்து வகைகள் உட்பட சகல வசதிகளையும் சுகாதார அமைச்சு ஏற்கனவே வழங்கி இருப்பதாக டொக்டர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்தார்.

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.