கொழும்பு துறைமுகத்திற்கருகாமையில நங்குரமிட்டுள்ள எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் பரவிய தீ தற்போது கப்பல் முழுவதும் பரவி மிக மோசமான நிலையை எட்டியிருப்பதாக சமுத்திர பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஹசீரா துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு வந்த இந்த MV X-Press Pearl  என்ற கப்பலில் கடந்த வியாழக்கிழமை (20) தீ ஏற்பட்டது . கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிடப்பட்ட நிலையில் கப்பலில் தீப்பற்றியுள்ளது.
222222222222இதுதொடர்பாக இன்று (26) நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் சமுத்திர பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி சட்டத்தரணி திருமதி. தர்ஷனி லஹதபுர தெரிவிக்கையில் ,தீயை அணைப்பதற்காக இந்திய விமானப்படையின் ட்ரோனா விமானம் ஒன்றும் இலங்கை வரவிருப்பதாகவும் கூறினார்.Captur444444444444

கபபலில் தற்போது பரவிவரும் தீ தொடர்பாக தெரிவிக்கையில், தீ நேற்றிலும் பார்க்க இன்று மிக வேகமாக பரவியுள்ளது. தீ முன்னர் கப்பலின் முன்புறத்தில் காணப்பட்டது. ஆனால் தற்போது தீ கப்பல் முழுவதும் பரவியுள்ளது.இந்த சந்தர்ப்பத்தில் தீயை அணைப்பதற்காக இந்தியாவில் இருந்து இரண்டு கப்பல்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளன. நாளையும் மேலும் ஒரு இந்திய கப்பல்; வரவுள்ளது. இதே போன்று இந்திய ட்ரோன் விமானமொன்றும் இன்று வரவுள்ளது. கப்பலின் கட்டமைப்புக்கு இதுவரையில் பாதிப்பு ஏற்படவில்லை. எரிபொருள் கசிவை காணக்கூடியதாக இல்லை. இருப்பினும் இதுதொடர்பாக சமுத்திர பாதுகாப்பு  அதிகார சபை என்ற ரீதியில் மிக அவதானத்துடன் நாம் செயல்பட்டுவருகின்றோம் என்று தெரிவித்தார்.

கப்பலில் எரிபொருள் கசிவு ஏற்பட்டால் அது நீர்கொழும்பு கடற்கரைவரை இழுத்துச்செல்லப்படும் என்றும் அதிகார சபையின் தலைவி சட்டத்தரணி திருமதி. தர்ஷனி லஹதபுர கூறினார். (Siyane News)

அரசாங்க தகவல் திணைக்களம் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.