சிஐடி இனரால் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை தடுப்பு காவல் உத்தரவில் இருந்து விடுவிக்குமாறு கோரி உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரிஷாட் இன் சட்டத்தரணிகளால் குறித்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன் பிரதிவாதிகளாக பொலிஸ்மா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், குறித்த திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

(SIYANE NEWS)



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.