சர்வதேச பத்திரிகை தினத்தை முன்னிட்டு இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் “சமகால அரசியல் நிலவரங்களுக்கு மத்தியில் ஊடக சுதந்திரமும் ஊடகங்களின் பொறுப்புகளும்”எனும் கருப்பொருளில் இன்று(03) ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நிகழ்வு நாட்டில் ஏற்ப்பட்டுள்ள கோவிட் நிலமைகளைக் கருத்திற் கொண்டு வெப்பி்னர் வழியே இன்று (03) காலை இடம் பெற்றது.

இந்தநிகழ்வில் சட்டத்தரணி ஜகத் லியன ஆராய்ச்சி,முன்னால் ஊடகத் துறை அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்,இலங்கை பத்தரிகை ஸ்தாபனத்தின் தலைவர் கலாநிதி மஹிந்த பத்திரன,சமூக செயற்பாட்டாளர் ருக்கி பெர்னான்டோ மற்றும் ஊடகவியலாளர் வி.மேனக கமகே ஆகியோர் பங்கேற்றனர்.

இந் நிகழ்வில் இம்தியாஸ் பாக்கிர் மாகாரின் ஆற்றிய உரையின் சுருக்கம் பின்வருமாறு.

1. தனிப்பட்ட மற்றும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களை கைவிட்டு நமது சமூகத்தின் பொதுவான நலனை நோக்கி செல்லுமாறு ஊடக சமூகத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்.

2. அதிகாரத்தினை எதிர்கொண்டு உண்மையை தைரியமாகக் கூற ஒரு தளத்தை வழங்குவது முற்போக்கான ஊடக சமூகத்தின் பொறுப்பாகும். 2002-2004 காலப்பகுதியில் நான் ஊடக அமைச்சரவை அமைச்சராக இருந்த காலத்தில் என்னால் செயல்படுத்தப்பட்ட சில திட்டங்களை நினைவுபடுத்த விரும்புகிறேன்.  அதன் முன்ணுதாரணம் இன்றும் செல்லுபடியாகும் என்று நினைக்கிறேன்.

-பத்திரிகைக் கல்லூரி / நிறுவனம் நிறுவுதல்

- பத்திரிகை முறைப்பாட்டு ஆணையக்குழுவை நிறுவுதல்

- பத்திரிகை ஒன்றியத்தை ஒழித்தல்

- தண்டனைச் சட்டத்திலிருந்து குற்றவியல் அவதூறு பிரிவை நீக்குதல்.

3. ஊடகங்களின் பொறுப்பு என்பது ரேஸர் பிளேடு போன்றது.  இது ஹனுமாவின் வால் போல வேலை செய்யக் கூடாது.

4. வரலாறு முழுவதும், நமது சமுதாயத்தில் பிரிவினைவாத சித்தாந்தங்களின் பரவலானது மத, இன, அவ நம்பிக்கை, சந்தேகம், அத்துடன் மோதல்கள் உருவாக்குவது,மோதல்களை  தூண்டுவதில் சில ஊடகங்களின் வகிபாகம் வழிவகுத்தது என்று சொல்வது தவறல்ல.

5. தற்போது ஊடகத் துறையில் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்தினதும்,அமைச்சரினதும் கவனத்தை பின்வரும் விடயங்களில் ஈர்க்கிறேன்.

-ஊடகவியலாளர்களின் தொழில் பாதுகாப்பு

-ஃப்ரீலான்ஸ்(சுயாதீன)ஊடகவியலாளர்களின் விதி மற்றும் கொடுப்பனவுகள் குறித்து

- ஊடகவியலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான திட்டத்தை செயல்படுத்துதல்

-ஃப்ரீலான்ஸ்(சுயாதீன) ஊடகவியலாளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்குதல்

- தனியார் ஊடகவியலாளர்களின்  கொடுப்பனவுகளை புதுப்பித்தல்

- பத்திரிகையாளர்களின் தொழில் நிலையை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் மற்றும் படிப்புகளை நடத்துதல்

6. சில ஊடகங்கள் COVID-19 யை அறிக்கையிடும் விதம் குறித்து சமூகத்தில் கடுமையான அதிருப்தி உள்ளது.

- தனி நபரின் சுயாதீனத்தை அவமரியாதை செய்தல்

- மனிதநேயம் இல்லாது போதல்

- ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறிமுறைகளை புறக்கணித்தல்

- தொழில்முறை அல்லாத அறிக்கையிடல்

போன்ற பல குறைபாடுகளைக் கண்டோம்.

7.நோய்வாய்ப்பட்டவர்களை இராணுவ நடவடிக்கை வடிவில் அரக்கர்களாக சித்தரிக்கப்படுவதை நாங்கள் கண்டிருக்கிறோம், ஆனால் அறிக்கையிடல் சார்ந்த அறிவுப் பற்றாக்குறை மற்றும் அறிக்கையிடலில் பயிற்சி இம்மை என்பவற்றால் ஊடகவியலாளரை மட்டும் இதற்காகக் குறை கூற முடியாது.அந்த அறிவையும் பயிற்சியையும் அதிகரிப்பது காலத்தின் தேவையாகும். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.