நாளையும், நாளை மறுதினமும் பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படும்.

அத்தோடு இன்று (29) இரவு தொடக்கம் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு செல்வதற்கு அனுமதி உண்டு என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இதற்கான அனுமதி உணவு ,காய்கறி ,மீன் உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய உற்பத்திகளை விநியோகிக்கும் லொரி மற்றும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவற்றுக்காக ,விசேட அனுமதிப்பத்திரம் தேவை இல்லை என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

சில்லறை வர்த்தகர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்கள் மத்திய நிலையஙகளில் பொருள்களைக் கொள்வனவு செய்ய முடியும்.

இதேவேளை, பேலியகொடை மீன் சந்தையும் நாளை மீண்டும் திறக்கப்படும். 

அரசாங்க தகவல் திணைக்களம்

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.