எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராஜித சேனரத்ன தெரிவித்த கருத்துக்கள்.

தொற்றுநோய் நாட்டை கடுமையான மட்டத்தில் பாதித்துக் கொண்டுருக்கும்  நேரத்தில், எல்லா விடயங்களையும் ஒதுக்கி வைக்கப்பட்டு, துறைமுக நகர சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சட்டம் நிறைவேறும் நாள் வரை நாட்டைத் திறந்து விட்டவர்கள் நிறைவேறியதும் நாட்டை முடக்கியுள்ளனர்.மனித வாழ்க்கையை விட துறைமுகச் சட்டம் முக்கியமானது என்பதுவே அரசாங்கத்திற்கு முன்னுரிமையாக தெளிவாகத் தெரிகிறது. நட்டின் மருத்துவ சங்கத்தின் தலைவர் பத்மா குணரத்ன இன்றைய த அய்லன்ட் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ள விடயம் தான், தற்போதைக்கு அவசரமாக சினோஃபார்ம் தடுப்பூசி போடுவதல்ல முக்கியம், நாட்டை முடக்க வேண்டும் என்பதே என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் ஏன் இவ்வளவு அவசரத்தில் இருக்கிறது?  துறைமுக நகரத்திற்கான அரசாங்கத்தின் அவசரத்தை போல் மருத்துவ சங்கங்கள் கூறும் விடயங்களை ஏன் அரசாங்கம் ஏற்கவில்லை. நாட்டிற்கு மருந்துகளை கொள்வனவு செய்யும் உறுப்பினர்கள் தொடர்பாக ஆராய்ந்தோம். இதில் வைத்தியர்  ஆனந்த விஜேவிக்ரம,வைத்தியர் ஹசித திசெர,வைத்தியர் பிரசன்ன குணசேன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 இவர்கள் மருந்துகள் தொடர்பான விஷேட நிபுணத்துவ திறன் அற்றவர்கள். இவர்களையும் விட நிபுணத்துவ ஆற்றமிக்கவர்கள் நாட்டில் உள்ளனர். இந்த குழுவில் மருந்துகள்  கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேன தான் கூறினார். தடுப்பூசிகளை ஒன்றுடன் ஒன்று  கலக்கப்படலாம் என்று. ஆனால் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இதுபோன்ற கலவையை வழங்குவது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறுகிறது, எனவே இது போன்றவர்களின் முடிவுகள்தான் இன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது. 

இவர்கள் போன்றவர்கள் இன்று சுகாதார விடயங்களை நாட்டில் கையாள்கின்றனர். முழு நாடும் கோவிட்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இதிலிருந்து மீளுவதற்கு தாமதமாகுவது நிபுனத்துவ ஆற்றல் அற்ற வியத்மக எனக் கூறிக் கொண்டு ஜனாதிபதியை சுற்றி இருப்பவர்கள்.

தற்போது இலங்கையில் சுமார் 300,000 அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகள் உள்ளன. 300,000  தடுப்பூசிகளும் பொலிஸ் மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளன. இது பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படுவது ஒரு நல்ல விஷயம். இந்த நிலைமை இருந்தபோதிலும், வர்த்தக முதலீட்டு சபை இந்த தடுப்பூசி ரூ.5,000 க்கு பெற முடியும் என்று கூறுகிறது.யார் அதைச் செய்கிறார்கள்? சேம்பர் ஆஃப் கொமர்ஸுக்கு விற்க தடுப்பூசியை நாம் எங்கே பெற முடியும்? சின்னாபார் தடுப்பூசி வாங்க ரூ.500,000 செலவிடப்படும் என்று ஞாயிறு தினமின செய்தித்தாள் கூறுகிறது. 

பிரிதொரு நாளிதழ் 140  இலட்சம் என்று கூறுகிறது. இலங்கை செய்திகளில் ஒரே நாளில் இரண்டு செய்தித்தாள்களும்  வேறு வேறு அறிக்கைளைக் கூறுகின்றன. இதற்கிடையில், அரசாங்கத்தின் சொந்த செய்தித்தாள் ஒவ்வொன்றாக அறிக்கை செய்கிறது. ஆனால் மவ்பிம பத்திரிகைக்கு பிரதி சுகாதார பணிப்பாளர் “யாரும் பணம் கொடுத்து தடுப்பூசி ஏற்ற வேண்டாம் சகலருக்கும் அரசாங்கம் வழங்கும்”என்று கூறியுள்ளார். இடது பக்கம் என்ன செய்கிறார்கள் என்பது வலது பக்கமுள்ளவர்களுக்கு தெரிவதில்லை. நாடு இன்று அத்தகைய சூழ்நிலையில் உள்ளது.

கோவிட் நோயாளிகளுக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கக் கூடாது என்று ஒரு அரசு அதிகாரி சங்கம் கூறுகிறது. மற்றும் சிலர் அதுவே சிறந்த முறை என்று கூறுகின்றனர்.மற்றொரு அதிகாரி, சீன தடுப்பூசி இலங்கையில் தயாரிக்கப்படுகிறது என்று கூறினார்.

இந்த மக்களுக்கு என்ன பொய் சொல்கிறார்கள். நாங்கள் செய்வது ஒரு தயாரிப்பு. நம் நாட்டில் எல்லாவற்றையும் செய்கிறோம் 2 முதல் 4 மில்லியன் திறன் கொண்ட மருந்துகளை வழங்கும் தனியார் நிறுவனங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம். உற்பத்தி செய்யப்படும் மருந்துகளுடன் சுகாதார சேவைகள் இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பற்றாக்குறை உள்ளது உன்மைதான்.சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்டவைகளை இங்கு குப்பிகளில் இட்டு பெகிங் செய்வதை தான் இன்று இங்கு மேற்கொள்கின்றனர்.கிட்டிய எதிர்காலங்களில் கோவிட் நோயாளிகள் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் சுகாதாரத் துறை உட்பட உலக சுகாதார ஸ்தாபனம் வரை சகலரும் நாட்டை மூடுவதற்கு அழைப்பு விடுக்கின்றது. ஆனால் அரசாங்கம் துறைமுக நகர சட்டமூலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுகிறது. தேசபக்தர்கள் யார் என்பதை இந்த நாட்டு மக்கள் புரிந்து கொள்ளவர். உண்மையான தேசபக்தி வாயில் அல்ல,மனதில் உள்ளது. துறைமுக நகரின் நிதி அதிகாரம் நாடாளுமன்றத்தில் இல்லை. கோப் மற்றும் கோபா குழுக்களுக்கும்  பொறுப்புக்கூற வேண்டியதில்லை. இங்கு சட்டவிரோத உட்பிரிவுகளை நாங்கள் தோற்கடிக்க முடிகிறது. அலி சப்ரிக்கு மார்க்கத்திற்கு துரோகம் இழைக்க முடியும் என்றால் நாட்டிற்கு துரோகம் இழைப்பது பெரிய விடயமல்ல. நாட்டைக் காட்டிக் கொடுப்பது பெரிய விடயமல்ல.இந்த துறைமுக நகரத்தில் ஒரு பொலிஸ் படையை அமைக்குமாறு நாங்கள் பொலிசாரிடம் கூறினோம். இந்தச் சட்டத்தின் 75 விதிகளில் 25 ஷரத்துக்கள் அரசியலமைப்பிற்கு புறம்பானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கொடுக்க விரும்புவோர் இங்கு 21 சட்டங்களை அமல்படுத்த முடியாது.

 இன்று மொட்டுடன் உடன்பட்ட ஸ்ரீ.ல.சு.க.வின் முடிவால் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியினரும்  வருத்தப்படுகிறார்கள்.  இந்த அரசாங்கத்தின் அதிகாரம் பாராளுமன்றத்திற்குள் மட்டுமே உள்ளது, நாட்டில் இல்லை என்று தெரிவித்தார். (Siyane News)

විපක්ෂ නායක කාර්යාලයේ පැවැත්වෙන මාධ්‍ය හමුව

විපක්ෂ නායක කාර්යාලයේ පැවැත්වෙන මාධ්‍ය හමුව

Posted by Samagi Jana Balawegaya on Friday, May 21, 2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.