பயணத்தடை தளர்த்தப்பட்​டதை அடுத்து அத்தியாவசிய பொருள்களை ​கொள்வனவு செய்வதற்காக, ​இன்று 25ஆம் திகதி அதிகாலை 5 மணிமுதல், அங்காடிகளில் மக்கள் நிரம்பிருந்தனர்.

தங்களுக்குத் தேவையான அளவுக்கு பொருள்களை கொள்வனவு செய்துக்கொண்டனர்.

ஆனால், வாகனங்களை அனுமதிக்காமையால், தங்களுடைய வாகனம் நிறுத்தப்பட்​டிருக்கும் இடத்துக்கு தள்ளுவண்டியில் (வில்புரோ) வைத்து பொருள்களை எடுத்துச் சென்றனர்.

அவ்வாறான வீடியோவுடன் கூடிய காட்சிகள், சமூக ​வலைத்தளங்களில் வைரலாகியிருந்தன.

இந்நிலையில், அவ்வாறு பொருள்களை தள்ளுவண்டியில் (வில்பரோ) வைத்து தள்ளிச்சென்றவர், இன்றிரவு கைது செய்யப்பட்டார்.

அழுத்கம, தர்ஹா நகரைச் சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

முகக் கவசம் அணியாத குற்றச்சாட்டிக் கீழே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தமிழ் மிரர் 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.