இன்று(04) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளும்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்த கருத்துக்கள்.

இன்று கொரோனாவால் நாடு மிக மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.இதனால் நாட்டின் பொருளாதாரம் மேலும் சிக்கல் நிலையை நோக்கி நகர்கிறது.கோவிட் ஏற்ப்ட்டு ஒரு வருடங்கள் கடந்த  பின்னரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உன்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வில்லை. கட்டுப்பாட்டிற்குள் கொண்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமையினால் இன்று அரசாங்கத்தின் மீது சந்தோகம் எழுந்துள்ளது.சஜித் பிரேமதாசவும் எதிர்க் கட்சியினரும் தொடராக இதன் ஆபத்துக்களையும் நடைமுறைப்படுத்த வேண்டிய ஒழுங்குகளையும் சுட்டிக்காட்டிய போது அரசாங்கம் இவற்றை ஓர் அரசியல் காரணியாகவே பார்த்தது,கூறிய விடயங்களை கருத்திற் கொள்ளவில்லை.இன்றும் சுகாதாரத் துறையினர் சுகாதார நிர்வாக அதிகாரிகள் அடிக்கடி சுட்டிக் காட்டுவதிலிருந்து இதன் பரவலை புரிந்து கொள்ள முடியுமாக இருக்கிறது. பிசிஆர் பரிசோதனைகளை வேண்டும் என்றே குறைத்தனர் இவ்வாறு குறைப்பதன் மூலம் சமூக பரவல் இல்லை என்ற தோற்றப்பாட்டை நாட்டில் ஏற்படுத்தி அரசாங்த்தின் ஏனைய விடயங்களை முற்படுத்த முயற்சித்தனர்.இதன் விளைவுகளைத் தான் இன்று மூன்றாம் அலையில் கண்டு வருகிறோம். 

கோவிட் பரவல் இல்லை என்ற தோற்றப்பாட்டில் தான் அரசாங்கத்தின் தலைவர் முதல் சிறிய தலைவர்கள் வரை நடந்து கொள்கின்றனர். ஜனாதிபதி கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் எத்தகைய சுகாதார நடைமுறைகளுக்கும் பாரியளவில் முக்கியத்துவம் கொடுக்காது கலந்து கொண்டு வந்தார்.சுகாதார தரப்பு அறிவிக்கும் சுகாதாரா ஒழுங்குகள் சாதாரண மக்களுக்கு மாத்திரம் தான் என்ற நினைத்த வன்னம் அரசாங்க தரப்பினர் நடந்து கொள்கின்றனர்.திருமண நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும்  அரசாங்க தரப்பிலுள்ளவர்கள் திருமண நிகழ்வுகளில் பங்கேற்று புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளில் சாதரண மக்கள் பங்கேற்றால் இரனுவத்தினரை பயன்படுத்தி அடக்கு முறையைப் பிரயோகிக்கின்றனர். ஒரு சட்டம் இரு விதமாக செயற்படுத்தப்படுகிறது. 

கோவிட் நிலைமைகளைகளுக்கு மத்தியிலும் உக்ரைன் நாட்டவர்களை பெறுப்பற்ற விதத்தில் இங்கு அழைத்து வந்தனர்.இரண்டாம் அலை பரவலுக்கு இவர்களும் காரணமாக இருந்தனர். இதே போல் இன்று இந்தியர்களை இங்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இது நாட்டிற்கு ஆபத்தான நிலையாகும்.நாட்டு மக்களின் உயிர்களோடு விளையாடும் செயற்பாடாகும். இத்தகைய உலக வைரஸ் அச்சுறுத்தலுக்கும் மத்தயில் இலங்கையை ஒரு “சுற்றுலா வலயமாக” மாற்ற முயற்சிக்கின்றனர்.இந்த நடைமுறை உடனடியாக கைவிடப்பட வேண்டும். 

இன்று நாட்டில் தொற்றளர்களின் எண்ணிக்கையும் மரண எண்ணிக்கையும் நாளுக்கு நாள் சடுதியாக அதிகரித்த வன்னமுள்ளன.நாட்டின் நாலா பகங்களிலும் சமூக பரவல் ஏற்ப்பட்டுள்ளது.நாட்டின் சகல இடங்களிலும் தொற்றாளர்கள் இனம் காணப்பட்ட வன்னமுள்ளனர். இத்தகைய இக்கட்டான நிலையில் நாடு இருக்கும் போது அரசாங்கம் இதனைக் கட்டுப்படுத்துவதிலிருந்து விலகி செயற்படுவதிலிருந்து சந்தேகம் எழுகிறது.ஏன் இத்தகைய பெறுப்பற்ற விதமாக நடந்து கொள்கின்றனர். தமது செந்த மற்றும் சூழவுள்ள நண்பர்களின் பொருளாதார நலனிற்காக மக்களின் உயிரை கருத்திற் கொள்ளாமல் இருக்கின்றனர். 

கோவிட் ஏற்பட்ட ஆரம்ப நாட்களிலிருந்து விஞ்ஞானபூர்வ முடிவுகள் நடைமுறைகள் குறித்து கவனத்திற் கொள்ளாது மூட நம்பிக்கைகளின் பக்கம் சென்றனர். பல பாணிகளின் பக்கம் சென்றனர்.விஞ்ஞான நடைமுறைகளை புறக்கணித்தனர். இன்றைய நிலைக்கு அரசாங்கத்தின் மூடநம்பிக்கை தீர்வுகள் தான் காரணம். 

கடந்த ஏப்ரல் மாத ஆரம்பம் முதல் புத்தாண்டு காலம் வரை பின்வருமாறு தொற்றாளர்களின் எண்ணிக்கையை திட்டமிட்டு காண்பித்தனர்.

ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி 183,5 ஆம் திகதி 122,6 ஆம் திகதி 158,7 ஆம் திகதி 190,8 ஆம் திகதி 390,9ஆம் திகதி 183,10 ஆம் திகதி 268,11ஆம் திகதி 225,12 ஆம் திகதி 225,13 ஆம் திகதி 185,14ஆம் திகதி 199 15ஆம் திகதி 164,16 ஆம் திகதி 159 என்ற எண்ணிக்கையில் காண்பித்தனர்.பிசிஆர் பரிசோதனைகளின் பிரகாரம் காட்டிய எண்ணிக்கை தான் இவை.இன்று நாளுக்கு நாள் 1000 ஐயும்  தான்டி சென்று கொண்டிருக்கிறது.பிசிஆர் பரிசோதனைகளைக் குறைத்து மக்களுக்கு போலியான நம்பிக்கையை ஏற்படுத்தினார்கள். இதன் பிறகாவது அரசாங்கத்தின் அகங்காரத்தை ஒரு பக்கம் வைத்து விட்டு சுகதாரத் துறையினரின் அலோசனைகளின் பிரகாரம் நடவடிக்கைகளையும் தீர்வுகளையும் எடுக்குமாறு உரிய தரப்பைக் கேட்டுக்கொள் கிறேன்.பிசிஆர் பரிசோதனைகளை குறைக்குமாறு அரசாங்க தரப்பு தம்மிடம் வேண்டியதாக PHI சங்கத்தின் தலைவர் வெளிப்படையாகவே கூறினார்.எங்கள் தரப்பில் பிழை ஏற்ப்பட்டதாக சுதர்ஷனி அமைச்சர் கூறினார்.அவ்வாறு என்றால் அரசாங்க தரப்பால் ஏற்பட்ட பிழை என்ன என்று வினவுகிறேம்.

இன்று நாடு முகம் கொடுக்கும் வரையறையற்ற கொரோனா பரவலுக்கு மத்தியில் மக்களின உயிரைப் பாதுகாத்து மக்கள் நலன் சார்ந்து செயற்பட வேண்டி நிலையில் அரசாங்கம் அவசர அவசரமாக கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்ட மூலத்திற்கான வாக்கெடுப்பை பாராளுமன்றத்தில் கோரவுள்ளனர்.மக்களின் பக்கம் தமது கவனத்தைக் குவிக்க வேண்டிய அரசாங்கம் சீனாவின் நலனை முற்படுத்துகிறது. மக்களின் சுகாதார பாதுகாப்பு பற்றி சிந்திக்க வேண்டிய இன்றைய நிலையில் துறைமுக நகர சட்டம் பற்றிய விடயங்களை முற்படுத்தியுள்ளனர்.இக்கட்டான இந்த நிலையிலும் அரசாங்கம் தனது அதிகார இருப்பை பலப்படுத்தவே முயற்சிக்கிறது என்று தெரிவித்த அவர் கோவிட் ஜனாதிபதி அறக்கட்டளை நிதியில் எவ்வளவு தொகை இது வரை செலவிடப்பட்டுள்ளது? சுகாதார அமைச்சு இதுவரை கொரோனாவிற்காக எவ்வளவு தொகை நிதியை செலவிட்டுள்ளது என கேள்வி எழுப்பினார். (Siyane News)

විපක්ෂ නායක කාර්යාලයේ පැවැත්වෙන මාධ්‍ය හමුව සජීවීව

විපක්ෂ නායක කාර්යාලයේ පැවැත්වෙන මාධ්‍ය හමුව සජීවීව

Posted by Samagi Jana Balawegaya on Monday, May 3, 2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.