கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட அசேல சம்பத்தின் பிள்ளைகளுக்கு மடிகணினி மற்றும் புலமைப்பரிசில் வழங்கிய எதிர்க்கட்சி தலைவர்!

Rihmy Hakeem
By -
0

 சமூக ஆர்வலரும் செயற்பாட்டாளருமான அசேல சம்பத் அவர்களுடைய மகனுக்கும் மகளுக்கும் தங்களுடைய கல்வி நடவடிக்கைகளைத் தொடர எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவில் உருவாகி செயற்பட்டு வரும் 'சத்காரய' நடமாடும் சேவை திட்டத்தின் கீழ் இன்று (28) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து சஜித் பிரேமதாச தனது ஆதரவை வழங்கினார்.

இதன் பிரகாரம், திரு.அசேல சம்பத்தின் மகனுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டதோடு மற்றும் அவரது மகளுக்கு உயர் கல்விக்கான புலமைப்பரிசிலும் வழங்கப்பட்டது.

அசேல சம்பத் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக போராடும் ஒரு தனித்துவமான நபர் என்றும், அவரது சேவையைப் தான் பாராட்டுவதாகவும், வெற்றிகரமான கல்வியைத் தொடர அசேல  சம்பத்தின் பிள்ளைகளுக்கு தான் அழைப்பு விடுப்பதாகவும் இதன் போது சஜித் பிரேமதாச தெரிவித்தார். (Siyane News)









கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)