கடன் அட்டைகள் தொடர்பான பண மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய சீனப் பிரஜை ஒருவரும் இலங்கையர்கள் மூவரும் கல்கிசையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்களினால் போலி கடன் அட்டைகள் தயாரிக்கப்பட்டு அவற்றை பயன்படுத்தி ஒன்லைன் ஊடாக பல்வேறு பொருட்கள் கொள்வனவு செய்திருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் சுமார் ரூ.7 இலட்சத்து 87 ஆயிரம் நிதி மோசடி இடம்பெற்றமை தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்தே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.