தயாசிறி ஜயசேகர

தற்போது அரசாங்கத்திற்குள் சதியொன்று இடம்பெற்று வருவதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து இருக்கும் கட்சிகளை அரசில் இருந்து வெளியேற்றும் சதியே அது எனவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தை அமைப்பதற்கு துணை புரிந்த கட்சித் தலைவர்களை அமைச்சரவையில் இருந்து நீக்குவதற்கும் அவர்களது கட்சிகளை அரசாங்கத்தில் இருந்து நீக்குவதற்கும் திட்டம் போடப்பட்டிருப்பதாகவும் இவ்வாறு சென்றால் சுதந்திர கட்சியும் இந்த சூழ்நிலையை எதிர்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் உதய கம்மன்பில எடுத்த தீர்மானம் அரசாங்கத்தின் தீர்மானமே எனவும் அதன் காரணமாக ஏற்பட்டுள்ள பிளவை சாதகமாக பயன்படுத்தி இலாபம் அடைவது எதிர்க்கட்சியின் திட்டமாக இருக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.