தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காக மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியில் சில பொது மக்களை துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் சில இராணுவ சிப்பாய்கள் பதவி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் உத்தரவுக்கு அமைவாகவே இந்த இடைநிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் போக்குவரத்து தடைகளை மீறியவர்களை இராணுவத்தினர், முழந்தாலிடச் செய்து அவர்களின் கைகளை உயர்த்தும்படி உத்தரவிட்டு துன்புறுத்தியு புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

இந் நிலையிலேயே அது குறித்து பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்துள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினரை இடைநீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையும் மேற்கொள்ள இராணுவத் தளபதி உத்தரவிட்டதுடன், இது குறித்து இராணுவ மற்றும் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(Virakesari)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.