அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர வெளியிட்டுள்ளார்.

கொவிட் தொற்று வைரசு  நிலவும் இந்தக் காலகட்டத்தில் அத்தியாவசிய சேவைகள் தொடர்பிலான இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக லங்கா சதோச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம், உணவு விநியோக துறைசார் திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஊடாக விநியோகிக்கப்படும் உணவு மற்றும் பான வகைகள், மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக விநியோகிக்கப்படும் ஏனைய அனைத்து நுகர்வு பொருட்கள் விநியோகம், களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல் மற்றும் நெறிமுறைப்படுத்தல் தொடர்பான அனைத்து கருமங்களும் சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இதனைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் அனைதது சதோச விற்பனை நிலையங்கள் மற்றும் களஞ்சிய சாலைகளும் திறக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன உரியஅதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.