இன்று (14) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்:
அரசாங்கம் எண்ணெய் விலையில் ஒரு குறும்புத்தனமான விளையாட்டை விளையாடி சமூகத்தின் அழுத்தத்தை திசை திருப்ப முயற்சிக்கிறது. நேற்று ஊடகங்களில் செய்திகளைப் பார்த்தபோது, பேக்கரி உரிமையாளர்கள், தனியார் பஸ் உரிமையாளர்கள், முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள், உள்ளிட்ட பலரும்,அரிசி பாக்கெட் முதல் பேருந்துகள் வரை, சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றைக் கண்டோம்.பொஹொட்டுவ கட்சியின் செயலாளர் எழுத்து மூல அறிக்கையின் மூலம் உதய கம்பன்பிலவை பதவி விலகுமாறு கோரினார்.அதற்கு பதிலளிக்கும் விதமாக உதய கம்பன்பில ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்.இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஜனாதிபதி ஊடக பிரிவு நியாயப்படுத்தி, ஒரு அறிக்கையை வெளியிட்டு அனைத்து அலைவரிசைகளிலும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது.
இதுபோன்று போலியான நாடகங்களை அரங்கேற்ற வேண்டாம் என்று நாங்கள் அரசாங்கத்திடம் கூறுகிறோம். நாட்டை பொருளாதார ரீதியாக உறுதிப்படுத்த எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளதாக கூறிய ஒரு அரசு இதுவே முதல் முறை.அரசங்கத்தின் இயலாமையைத் தான் இதன் மூலம் வெளிப்படுத்துகிறது.
பொருளாதரத்தின் உயிர் நாடி தான் பெற்றோலியம்.நீர்,மீன்,எரிவாயு விலைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரப்படுவதாக கூறுவதை புரிந்து கொள்வது கடினம்.
பொருளாதாரம் எவ்வாறு நிலைபெற முடியும் என்று எனக்கு புரியவில்லை. உதாரணமாக, 92 பெட்ரோல் துறைமுக வரி விதிப்புடன் ஆக்க கூடினால் 100 ரூபாய்க்கும் குறைவாக பெறலாம். இப்போது கூட பெட்ரோலியக் கூட்டுத்தாபணத்திற்கு இலாபம் உண்டு.இதையும் தாண்டியே மக்களின் நிதியை சூறையாடுகிறது.
இப்போது ஒன்றரை ஆண்டுகளாக ஸ்திர விலையை வைத்திருந்ததாக கூறுகிறார்கள்.
கடந்த ஆண்டு பெப்ரவரியில் உலக சந்தையில் எண்ணெய் விலை பீப்பாய்க்கு 19 அமெரிக்க டொலராகக் குறைந்தது. அந்த நேரத்தில் டின் மீன் மற்றும் பருப்புகளில் சலுகை வழங்கியதாக கூறினர். இப்போது பருப்பும் இல்லை,டின் மீனும் இல்லை.மீண்டும் தாம் ஒரு
திறமையற்ற ஆட்சியாளர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியாது மற்றும் கடன் சுமையை கட்டுப்படுத்த முடியாத என்ற வகையில் அரசாங்கம் செயற்ப்படுகிறது . 2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கத்தில், எண்ணெய் விலையை குறைத்தோம், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தோம், அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தோம், எரிவாயு விலையை குறைத்தோம்.இப்போது சகலதும் மறுபக்கம் திரும்பியுள்ளது. கீரி சம்பா அரிசி இன்று 100 ரூபாவல் கூடியுள்ளது. தற்போதைய ஆட்சியில் குறைவான விலையில் எதையும் நீங்கள் வாங்க முடியாது. அரசாங்கத்தின் வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு இந்த நேரத்தில் உதவியற்ற மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்.இப்போது தினசரி வருமானம் ஈட்டுபவர்கள் ஆதரவற்றவர்களாக மாறியுள்ளனர். ரூ .5000 சமூர்த்தி பெறுநர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது அரசாங்கத்தின் தன்னிச்சையான முடிவு.மக்களின் இரத்தத்தை உருஞ்சிக் குடிப்பதற்கு சமன். நீர் மற்றும் மின்சார கட்டன சீட்டுகள் அதிகரித்துள்ளன. தடுப்பூசியை கொள்வனவு செய்ய முடியவில்லை, உர பிரச்சினையை தீர்க்க முடியவில்லை, காடழிப்பை தீர்க்க முடியவில்லை, பொருட்களின் விலையை தீர்க்க முடியவில்லை, எனவே மீதமுள்ள ஒரே விஷயம், அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்து பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியுமான இளைய சக்திக்கு நாட்டை ஒப்படைக்க வேண்டும். இந்த அரசாங்கம் மிகவும் தேசபக்தியா? நாட்டு மக்கள் பசியுடன், கண்ணீருடன் இருக்கும்போது போலியான தேசபக்தியைக் காட்டுவதை விடுத்து நிர்வகிக்க முடியுமான இளைஞர்கள் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்தார். (Siyane News)
විපක්ෂ නායක කාර්යාලයේ පැවැත්වෙන මාධ්ය හමුව සජීවීවවිපක්ෂ නායක කාර්යාලයේ පැවැත්වෙන මාධ්ය හමුව සජීවීව
Posted by Samagi Jana Balawegaya on Sunday, June 13, 2021