எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்த கருத்துக்கள்.

தற்போதைய அரசாங்கம் எடுக்கும் முடிவுகளால் எதிர்காலத்தில் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட வேண்டியிருக்கும். உணவு உற்பத்தி 40% ஆல் குறையும் ஆபத்து ஏற்ப்பட்டுள்ளது.உணவு சார்ந்த பெருட்களின் கொள்வனவு விலைகள் உயரும். இதன் விளைவாக மக்கள் அதிக   சுமைகளை  தாங்க வேண்டியிருக்கும். பணம் இன்மையால் இப்போது மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. அவர்களது குடும்பங்களுக்கு அரிசி, தேங்காய்,பால் மா மற்றும் சீனி போன்ற அத்தியவசிய பொருட்களைக் கூட கொண்டு வர வழி இல்லாமல் இன்னல்களை எதிர் நோக்கிய வண்ணமுள்ளனர்.வணிகர்களும் உதவியற்றவர்களாகிவிட்டனர். நாட்டில் 40% மக்கள் விவசாயிகளாக உள்ளனர்.எனவே அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் விடயங்கள் குறித்து சிந்திக்க வேண்டும்.

ரணில் விக்கிரமசிங்க எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திற்கு வருவார். இது குறித்து அமைச்சர் மஹிந்தானந்த நாடாளுமன்றத்தில் அதிகம் பேசினார். ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வருவதால்   ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாங்கள் பயப்பட மாட்டோம். எந்த காரணத்திற்காகவும் எங்கள் எதிர்க்கட்சி பலவீனமடையாது. திரு ரணில் விக்ரமசிங்க மட்டுமே ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக எதிர்க்கட்சியில் இருக்கிறார். அந்த ஒருவரால் 50 பேருள்ள எங்கள் எதிர்க்கட்சிக்குள் எந்த பிரச்சனையும் வரம் போவதில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் வகுப்புவாத ரீதியாக ஒரு பிரச்சினை உள்ளது. ஒரு பிரபுத்துவம் அதற்குள்  இருக்கிறது, மறைந்த பிரேமதாச அவர்களும் இத்தகைய பல பிரசரசிணைகளுக்கு முகம் கொடுத்தே இறுதியில் வெற்றி பெற்றார்.இத்தகைய பேதங்களுக்கு அப்பால் நாட்டு மக்கள் அதற்கு பதிலளிக்க காத்திருக்கிறார்கள். எங்கள் எதிர்க்கட்சியில் யாரும் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரானவர்கள் இல்லை. இந் நாட்டிலுள்ள அநுபவமுள்ள அரசியல்வாதி இவரிடமிருந்தேனும் இந்த அரசாங்கம் முன்னேற பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளுமா என்ற விடயத்திலும் சந்தேகமுள்ளது.அவர் மூலம் இந்த அரசாங்கம் உதவிகளைப் பெறுவதாக இருந்தால் எங்களுக்கு எந்தப் பிரசரசிணையும் இல்லை. ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற வருகையைக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்திக்குள் உள்ளக குடும்ப தகராறுகளை குறிவைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.ஐக்கிய மக்கள் சக்திக்குள் மாற்றுக் கருத்துக்கள் இருக்கும் ஆனால் தகராறுகள் இருக்காது. உள்ளக தகராறுகளை தூன்டி விடும் வெளிநபர்கள் இருக்கலாம். எதிர் காலத்திற்கு  ஏற்ற ஒரு நாட்டிற்கான புதிய அரசியல் பயணத்தை நாங்கள் தொடங்க விரும்புகிறோம். நாங்கள் அதைத் சிரமங்களுக்கு மத்தியில் தொடங்கினோம், அதை வெற்றிகரமாக முடிப்போம் என்று கூற விரும்புகிறேன். ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது. அது முன்னைய டீல் அரசியல் காலத்தில் சாத்தியப்பட்டிருக்கலாம் ஆனால் தற்போதைய ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்க் கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவின் மூலம் அது சாத்தியமற்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

நாட்டில் உள்ள மக்களின் பிரச்சினைகளை மறக்க வைக்க அரசாங்கம் பியுமி ஹன்சமாலி மற்றும் ரனில் விக்கிரமசிங்க ஆகியோரை முன்னிலைப்படுத்தி செயற்ப்படுகிறது.வேறு யார் பயன்படுத்துவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்த பிரதேச சபை உறுப்பினர்கள் உறுப்புரிமைகளை கைவிட்ட வன்னம் நாட்டு மக்களின் கருத்துப்படி எங்களுடன் இணைந்தனர். இன்று ஐக்கிய  தேசியக் கட்சி தமக்குறிய கீழ் மட்ட ஆதரவு தளம் இன்மையால்அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கிறது.இவர்களை பாதுகாக்க எங்கள் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் சட்டத்தரணிகள் குழுவும் இனைந்து செயற்ப்பட்டு வருகிறோம்.

கோவிட் காரணமாக ரஞ்சன் ராமநாயக்க அவர்களை இன்று பார்வையிட  அனுமதிக்க மறுக்கப்படுகிறது.அவருக்காக நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

உணவு மற்றும் ஆகாரம்  இல்லாத நாட்டிற்காகவா  அறுபத்தொன்று மில்லியன் மக்கள் வாக்களித்தனர். இப்போது என்ன நடந்தது? மக்களுக்கு இன்று உணவு இல்லை. எந்த நாடும் இவ்வாறு மக்கள் விரேதமாக செயற்ப்படவில்லை.தற்போதை கொழும்பு துறைமுக நகரம் சீனாவிற்கு வழங்குவதன் மூலம் நமது நாட்டின் ஆல்புலம்  இழக்கப்படுகிறது. அரசாங்க அமைச்சர்கள் நேற்று நாடாளுமன்றத்தில் இதை ஒப்புக்கொண்டனர். பங்களாதேஷில் இருந்து கடன்களை எடுக்கும் விடயத்தையும் ஏற்றுக் கொண்டனர். எதிர்காலத்தில் எந்த நாட்டிலிருந்து கடன்களை எடுப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.எதிர்காலத்தில் நம் நாடு அரிசி இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும். இது காபனிக் உரத்தை 100% ஒரே தடவையில் அமுல்படுத்த முடியாது. மற்ற விடயம் இரசாயன உரத்தை விட காபனிக் உரங்களின் விலை மூன்று மடங்கு விலை அதிகம். எனவே, விவசாயிகள் மற்றும் நுகர்வோர் அனைவரும் பேரழிவிற்கு ஆளாக நேரிடும். இனவெறியை உருவாக்குவதன் மூலம் நாட்டு மக்களிடையே வெறுப்பைத் தூன்டி அதிகாரத்திற்கு வந்த அரசாங்கம், இன்று சகல பக்கங்களிலும் அதன் விளைவுகள் இன்று உணர்ந்து வருகிறது.

இன்று 14 ஆம் திகதி வரை நாட்டைப் பூட்டியுள்ளனர், ஆனால் எந்த வகையிலும் நோயாளிகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையில் எந்தக் குறைப்பும் ஏற்ப்படவில்லை. சமூகத்தில் ஏராளமான நோயாளிகள் இருப்பதையே இது காட்டுகிறது.இப்போது தடுப்பூசி போடுவதற்கான வழிமுறை அரசாங்கத்திடம் இல்லை.பிசிஆர் பரிசோதனைகளை குறைத்துள்ளனர்.அதன் மூலம் பெரும்பாலானவர்கள் தெற்றாளர்களாக இனம் கானப்பட்ட வன்னமுள்ளனர்.பிசிஆர் பரிசோதனைகள் சார்ந்த உன்மையான தரவகளை அரசாங்கம் மறைக்கிறது.நாம் ஆரம்பத்தில் இருந்தே சொன்னோம் தடுப்பூசி விடயத்தில் எந்த முன்னுரிமையும் இல்லை என்றவாறு.அஸ்டரா செனிகா இரண்டாவது டோஸைப் பெற மக்கள் காலிக்குச் சென்றிருந்தனர். நாடு முழுவதும் மக்கள் அஸ்ட்ரா செனிகாவின் இரண்டாவது டோஸைத் தேடுகிறார்கள். நாட்டில் ஒரு தடுப்பூசி மாஃபியா உருவாகியுள்ளது.இதை உருவாக்கியதும் அரசாங்கமே. தடுப்பூசி கொல்வனவு ஒழுங்கு ஆவணங்களை வெளிப்படுத்துமாறு  நாங்கள் கேட்கிறோம். இன்று தமது நட்பு வட்டாரங்களே தடுப்பூசிக்கான முன்னுரிமையாளர்களாக மாறியுள்ளனர்.வயது அடிப்படையில்,தொழில் அடிப்படையில் அல்லது வேறு விஞ்ஞான ரீதியான அடிப்படையில் இலங்கை அரசாங்கம் தடுப்பூசி விடயத்தை கையாளவில்லை.ஆரம்பத்தில் இது குறித்து சஜித் பிரேமதாச கூறிய போது நகைப்பாக எடுத்த விடயத்தை இன்று முன்னுரிமையாக செயற்ப்படுத்தி சர்வதேசத்திடம் ஆதரவு கோரி வருகிறது இந்த அரசாங்கம்.இதை ஏலவே செய்திருந்தால் இன்றைய பிரச்சிணைகள் எழுந்திருக்காதல்லவா.தடுப்பூசி கொள்வனவு விடயத்தில் நாடு இன்று வீழ்ச்சியடைந்துள்ளது, கொள்வனவு வரிசையில் பின்னனியில் உள்ளோம்.

நாங்கள் சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம்.

தனிமைப்படுத்தல் சட்டங்கள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக செயல்படுத்தப்படுகின்றன. நடிகளைகளை கைது செய்வது போல் குருநாகல் நகர சபை தவிசாளர் கைது செய்யப்படவில்ல.ஆனால் இதை அறிக்கையிட சென்ற ஊடகவியலாளர் வாக்குமூலம் வழங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்றும்,

"ஒரு பெரிய எரிவாயு மோசடி நடந்து கொண்டிருப்பதை நாங்கள் அறிவோம்," என்றும் மேலும் அவர் தெரிவித்தார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.