எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை

எண்ணெய் விலையை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த முடிவு குறித்து பொதுஜன பெரமுனவின் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். எண்ணெய் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், தனது கட்சி அதற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் கூறுகிறார். நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் எதிர் கொள்ளும் பீடனையை ஒரு நபரைக் குற்றம் சாட்டி தப்பித்துக் கொள்ளும் அவமானகரமான முயற்சியை பொதுஜன பெரமுனவின் செயலாளர் மேற்கொண்டுள்ளார். பழைய நடைமுறையைப் போலவே, பொதுஜன பெரமுனவின்  செயலாளரும் சென்று பல ஓட்டைகளை அடைத்துவிட்டுள்ளார்.உள்ளக ரீதியாக உருவாகி வரும் கடுமையான நெருக்கடியின் தீயை அரசாங்கம் இந்த அறிக்கையின் மூலம் வெளியேற்றியுள்ளது.

அவரது அறிவிப்பு மிகவும் அபத்தமானது, அவருடைய கட்சி தான் நாட்டை ஆளுகிறதா என்பது கூட அவருக்குத் தெரியாது போல.

இந்த நேரத்தில் அரசாங்கத்திடமும் பொதுஜன பெரமுனவிடத்திலும் கேட்பதற்கு எங்களிடம் பல கேள்விகள் உள்ளன.

1 -எரிபொருள் விலையை இரகசியமாக அதிகரிக்கும் அரசாங்கத்தின் முடிவை ஒரு அமைச்சர் தன்னிச்சையாக எவ்வாறு அதிகரித்தார்?அப்படியானால், அமைச்சரவை கூட்டுப் பெறுப்பை மீறி இதுபோன்ற முடிவு எடுக்கப்படும் வரை ஜனாதிபதியும், பிரதமரும், அரசாங்கத்தில் உள்ள பிற கட்சியினரும் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

2 -இதுபோன்ற முடிவுகளை வழக்கமாக எடுக்கும் முடிவுகளின்படி எடுக்கப்படுவதால், அமைச்சரவை சம்பந்தப்பட்ட முடிவில் ஒரு அமைச்சர் எவ்வாறு குற்றம் சாட்டப்படுவார்?

03-வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை துணைக்குழு ஜனாதிபதி, பிரதமரால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது.

மேலும் வர்த்தக அமைச்சர், விவசாய அமைச்சர், வணிக சீர்திருத்த இராஜாங்க அமைச்சர், நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் போன்றவர்கள் ஏனைய அங்கத்தவர்களாகும், எரிபொருள் விலையை அதிகரிக்க ஒருமனதாக முடிவெடுத்ததாக இந்த விஷயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கூறியது உன்மைக்குப் புறம்பானதா?  அப்படியானால், சம்பந்தப்பட்ட அமைச்சரவை துணைக்குழு வெறும் கற்பனையா? அமைச்சர் அந்தக் குழுவிற்கு மேலே உள்ளாரா?

4 -இந்த அரசாங்கத்தால் இதற்கு முன்னர் ஏராளமான மக்கள் துரோக முடிவுகளையும்,தீர்வுகளையும் எடுத்துள்ளது,இவற்றுக்கு மத்தியில் பெதுஜன பெரமுன இத்தகைய அபத்தமான அறிக்கையை திடீரென வெளியிடுவது,அரசாங்கத்திற்குள்ளேயே தீவிரமான நெருக்கடியுள்ளதை இது குறிக்கிறது அல்லவா?

இந்த நாட்டின் மக்களின் புத்தியை அவமதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட இத்தகைய அறிக்கைகள் அரசாங்கத்தின் தவறான கொள்கையை மக்கள் முன் அம்பலப்படுத்துவதைத் தவிர வேறில்லை.

எரிபொருள் விலையை அதிகரிக்க எடுக்கப்பட்ட தன்னிச்சையான முடிவை மாற்றியமைப்பதைத் தவிர வேறு வழியில்லை, மேலும் சம்பந்தப்பட்ட வர்த்தமானியை 'மீள அழைத்து' மாற்றுமாறு அரசாங்கத்தை கட்டாயப்படுத்தும் ஒரு கருத்தோட்டம் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.தொடர்புடைய செயற்ப்பாட்டில் நெசவாளரின் பங்கைப் போல ஓர் பங்கையே பொஹோட்டுவவின் செயலாளர் சித்தரிக்கிறார்.

அரசாங்கம் ஏற்கனவே மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது, அரசாங்கத்தின் பிரதான கட்சியான பொதுஜன பெரமுன கூட அது ஆட்சி செய்கிறதா  என்பதை உணரவில்லை.

தற்போதைய அரசாங்கம் இந்த நாட்டை ஒரு ஆபத்தில் பரந்த விரிவாக்கமாக மாற்றியுள்ளது, இந்த நேரத்தில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் ஒரு குழுவிற்கு நாட்டை ஒப்படைத்து அரசாங்கம்  இராஜினாமா செய்ய வேண்டும் என்பதாகும்.


சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.