"நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய உரையானது  திறமையின்மையையும் விரக்தியையும் மட்டுமே காட்டுகிறது" - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பதில்

நாட்டு மக்களுக்கான ஜனாதிபதியின் உரை மக்களின் எதிர்பார்ப்புகளை முற்றிலுமாக சிதைத்த உரை என்றும் இது அரசாங்கத்தின் திறமையற்ற தன்மையையும் தோல்வியையும் நிரூபிக்கிறது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார். 

மக்கள் சார்பாக செய்யப்பட வேண்டிய ஆறு அவசர செயல்கள் குறித்து ஜனாதிபதியின் கவனத்தை ஈர்ப்பதற்காக தான் உட்பட ஐக்கிய மக்கள் சக்தி நேற்று ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டதாகவும், அவை தொடர்பாக குறைந்த பட்ச கனவனத்தையேனும் ஜனாதிபதி செலுத்தவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஒருங்கிணைவாக ஆரோக்கியமான நாட்டைக் கட்டியொழுப்பும் நோக்கில் எதி்ர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் "ஜன சுவய" கருத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற சமூக நலத்திட்டத்தின் 18 ஆவது கட்டமாக முப்பத்தி மூன்று இலட்சம் ரூபா (ரூ.3,30000.00)  பெறுமதி வாய்ந்த அத்தியவசிய மருத்துவமனை உபகரணங்கள் மாத்தளை லக்கல வைத்தியசாலைக்கு இன்று (27) நன்கொடையாக வழங்கப்பட்டது.இந் நிகழ்வில் பங்கேற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதற்கு அமைவாக ரூபா.450,00 பெறுமதி வாய்ந்த Multipara monitors இரண்டும், ரூபா.1200,000.00 பெறுமதி வாய்ந்த Highflow Oxigen  இயந்திரமொன்றும், ரூபா 1,200,000.00 பெறுமதி வாய்ந்த Biopap Machine இயந்திரம் ஒன்றும் இவ்வாறு லக்கல மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர்.அபிஷேக சங்கல்ப  அவர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.​

கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் "ஜன சுவய" கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.