இலங்கையில் கொரோனா தொற்று மூன்றாவது அலை ஆரம்பமான நாளில் இருந்து இலங்கையின் நிலைமை மிக மோசமாக செல்வதாக தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், இலங்கையில் தற்போது முடக்கம் என்கின்றனர். பயணக்கட்டுபாடு என்கின்றனர்.

ஆனால், அது என்னவென்று யாருக்குமே தெரியவில்லை. அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ, யாழ்ப்பாணத்துக்கு நேற்றுமுன்தினம்(30) வருகைத் தந்தார். அப்படியாயின் அவருக்கு பயணக்கட்டுபாடு இல்லையா? என தான் கேட்கவிரும்புகிறேன் என்றார்.

அவரது இல்லத்தில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே
மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர்,

‘அரசாங்கத்தால் தடுப்பூசி செலுத்தும் செயற்றிட்டம் உரியவகையில்
முன்னெடுக்கப்படுவதில்லை. அஸ்ட்ராசெனிகா முதலாவது டோஸை
ஏற்றியவர்களுக்கு இரண்டாவது டோஸை ஏற்ற முடியாமல் உள்ளது.
அமெரிக்காவில் அஸ்ட்ராசெனிகா மேலதிக டோஸ்கள் உள்ளன. ஆனால்
அவற்றை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபடவில்லை”
என்றார்.

அந்த தடுப்பூசியை எமக்கு வழங்குமாறு. நாம் அந்த நாடுகளிடம்
கோருகின்றோம். தடுப்பூசி பணம் கொடுத்து வாங்குவதற்கு
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் முன்வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவிக்க வேண்டும் எனத்
தெரிவித்த அவர், எனவே தடுப்பூசியை கொள்வனவ செய்ய உங்களால்
முடியாதென்றால் இதை செய்யவாவது எமக்கு இடமளியுங்கள் என
கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்தார்.

பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்கள், மட்டக்களப்பில் ஒன்று, யாழில்
இரண்டும் மட்டுமே உள்ளன. எனவே, குறைந்தது.ஒரு மாவட்டத்துக்கு ஒரு
பி.சி.ஆர் இயந்திரத்தையாவது வழங்க வேண்டும். அதுவும் அரசாங்கத்தால்
முடியாதென்றால் அதையம் நாம் கொள்வனவு செய்ய முடியும். இதனை
அன்பளிப்பாக பெற்று எமது மக்களின் உயிரை எம்மால் பாதுகாக்க முடியும்.
இதற்கு நாம் தயார் என்றார்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ரீதியில் நிதியம் ஒன்றை ஆரம்பித்து,
தடுப்பூசி உள்ளிட்ட அனைத்து மருத்துவ விடயங்களுக்கும் தேவையான
நிதியை அதன்மூலம் எம்மால் சேகரிக்க முடியும்” என்றார்.

 இதேவேளை 2 மாதங்களுக்கு முன்னர் நீதியமைச்சர் கொவிட்- 19 தொடர்பில்
சட்டமொன்றைத் தயாரிப்பதாக கூறினார். ஆனால், இதுவரை இல்லை.

 தான்
தனிப்பட்ட ரீதியில் public health emegency  சட்டமூலமொன்றை முன்வைத்தேன்.
அதை நிறைவேற்றினால் இதனை சரியாக முகாமைத்துவம் செய்யலாம்.
ஆனால், சுகாதார அமைச்சுக்கு அது அனுப்பப்பட்டு, அங்கு முதலாம் வாசிப்பு
நிறைவுபெற்றுள்ளதாகவும் இதனை  யாரும் இதுவரை உயர்நீதிமன்றில்
சவாலுக்கு உட்படுத்தவில்லை என்றார்.

தமிழ் மிரர் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.