கொவிட் -19 வைரஸ் பரவல் சமூக பரவலாக மாற்றம் பெற்று கட்டுப்பாட்டை மீறிய நிலை காணப்படுகின்ற போதிலும், இன்னமும் இதனை கொத்தணிகளுக்குள் முடக்கவே கொவிட் -19 செயலணி முயற்சிக்கிறது.

தற்போதுள்ள நிலையில் 70 சத வீதமானோருக்கேனும் தடுப்பூசிகளை ஏற்றினால் மாத்திரமே சமூக பரவலிலிருந்து விடுபட முடியுமென இலங்கையின் சிரேஷ்ட வைரஸ் ஆய்வுகள் தொடர்பான நிபுணரும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் வைரஸ் கட்டுப்பாட்டு சபையின் முன்னாள் உறுப்பினருமான நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

நாட்டை முழுமையாக முடக்கி மக்களின் அனாவசிய செயற்பாடுகளை தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றார்.

கொவிட் -19 வைரஸ் பரவல் நிலைமைகள் குறித்து செயலணிக்கூட்டங்களில் கலந்துரையாடப்பட்டு வருகின்ற நிலையில் வைரஸ் பரவல்கள் தொடர்பிலான விசேட நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர் திஸ்ஸ விதாரணவிடம் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து வினவிய போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் -19 வைரஸ் பரவல் சமூக பரவலாகி இன்று மிக மோசமான நிலை ஒன்றில் உள்ளது, ஆனால் கொவிட் -19 வைரஸ் பரவலை கையாளும் செயலணி தொடர்ச்சியாக பொய்களை கூறி வருகிறது. சமூக பரவலாகியுள்ள நிலையில் கொத்தணிகளுக்குள் இதனை அடக்கிவிட முடியாது. இதனை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். சுகாதார நிபுணர்களும், வைத்தியர்களும் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே போன்றவர்களும் எனது கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கின்றனர்.

ஆனால் ஒரு சிலர் அதனை மறுக்கின்றனர். உண்மையை கூறுவதென்றால் ஆரம்பத்தில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் இப்போது எடுக்கப்படவில்லை. அல்லது கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். (Siyane News)

யசி - வீரகேசரி

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.