கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலின் கொள்கலன்களிலிருந்து கரைக்கு அடித்து வரப்பட்ட 584 டொன் பிளாஸ்டிக் பொருட்கள் நேற்று கரையிலிருந்து அகற்றப்பட்டதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சிறிய பிளாஸ்டிக் பந்துகள் போன்ற இந்த பொருட்கள் இப்போது பாதுகாப்பாக எடுத்து சேமித்து வைத்துள்ளதாக இவ்வமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடற்படையினரால் தொடர்ந்தும் கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.