# மீள் பதிவு 
#பால்யகாலசகி 

வைக்கம் முகமது பஷீர் மலையாள இலக்கிய உலகில் தவிர்க்க இயலாத பெயர்.
வாழ்க்கையின் யாதார்த்த பக்கங்களை எந்த வித சமரசமும் இன்றி பொட்டில் அடித்தாற் போல் சொல்லிவிடுவதில் பஷீர் வல்லவர்.
பால்ய கால சகி.... இது ஆட்டோகிராஃப் பட கதைதான் ஆனால் 60 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்து கதை. 
மலையாள தேசத்து முஸ்லீம்களின் வாழ்கை முறை, மொழி , கல்லங் கபடமற்ற மக்கள் என்று எல்லாம் நமக்கு வியப்பே!.
சுகாரா , மஸ்ஜித் என்று இன்று பாத்திரங்களுக்கு இடையில் இருக்கும் அன்பே கதைக்கரு. அவர்களை சுற்றியிருக்கும் மக்கள், சூழல் என்று இதுவோர் நெகிழ வைக்கும் கதை.
காதலர்கள் என்றால் பல பேராட்டங்களுக்கு பிறகு சேர்ந்து விடும் சுப முடிவையோ , இல்லை இருவரும் இறந்து விடுவர் என்ற இரு வேறு முடிவுகளை மட்டுமே அறிந்தவர்களுக்கு இக் கதை பேரதிர்ச்சியைக் கொடுக்கும் .
வாழ்க்கை அதை விட வலி மிகுந்தது என்பதை பஷீர் மிக சாதரணமாக சொல்லி விடுகிறார்.

80 பக்கங்கள் மட்டுமே கொண்டவோர் கதை.
வாசித்துப் பாருங்கள் 

சுகாராவுக்கு அன்பு மட்டுமே காட்டத் தெரியும்'. இக்கதையில் பல இடங்களில் வரும் வாசகம்.
நீங்களும் உணர்வீர்கள்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.