புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞரும், ஆய்வாளரும் ,பன்னூால் ஆசிரியரும், பனமொழித்துறை நிபுணரும், ஆன்மீக தலைவருமான கலாநிதி தைக்கா சுஐப் ஆலிம் அவர்கள் தனது 90 வயதில் நேற்று பின்னிரவு இந்தியாவின் கேரளா மாநிலத்தில் காலமானார்.

தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டத்தின் கீழக்கரையில் பிறந்த தைக்கா சுஐப் ஆலிம் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாவார். இவர் அமெரிக்காவின் Columbia Pacific பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில்  தனது முதுமாணி மற்றும்  கலாநிதிப் பட்டங்களைப் பூர்த்தி செய்தார்.

தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் வசிக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் "அரபு, அரபுத்தமிழ், பாரசீகம், உர்து" ஆகிய மொழிகள் மற்றும் கல்வி, இலக்கியத் துறைகளுக்கு வழங்கிய பங்கிளிப்புக்கள்" என்ற தலைப்பில்  30 வருட ஆராய்ச்சியின் பின்னர் 880 பக்கங்களைக் கொண்ட ஆய்வுநூலை வௌயிட்டார். இந்தியாவின் 9ஆவது பிரதமர் கலாநிதி சங்கர் தயால் சர்மா 1993ம் ஆண்டு இந்த ஆய்வுநூலை வெளியிட்டு வைத்தார்.  சார்க் அமைப்பின் அரச தலைவர்களாலும் இந்த ஆய்வு நூல் பின்னர் வெளியிட்டு வைக்கப்பட்டது.

சிறந்த அரபு அறிஞருக்கான "இந்தியாவின் தேசிய" விருதை இரண்டு தடவைகள் வென்ற தைக்கா சுஐப் ஆலிம் அவர்கள், உலகின் செல்வாக்கு மிக்க 500 முஸ்லிம்களின் பட்டியலிலும் தொடர்ச்சியாக இடம்பிடித்துவந்தார். பத்துக்கும் அதிகமான புத்தகளையும் அவர் எழுதியுள்ளார். 

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையிக்கு மூன்று தசாப்த்தகளுக்கு மேலாக அவர்கள் பங்களிப்பு வழங்கியிருந்தார்கள்.

நீண்டகாலமாக ஆன்மீகத்தலைவராக இருந்து இன ஒற்றுமைகளை வலுப்படுத்த அவர் வழங்கிய பங்களிப்புக்கள் மகத்தானவை.

இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லுறவை வெளிப்படுத்துவதற்காக கைக்காசைப் ஆலிம் அவர்கள் மேற்கொண்ட பணிகளை கௌரவிக்கும் வகையில் 2016ஆம் ஆண்டில்  முன்னாள் ஜனாதிபதி தலைமையில் கௌரவிப்பு நிகழ்வு ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

காலஞ்சென்ற கலாநிதி தைக்கா சுஐப்  ஆலிமின் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அவரது மகனும், அரூஸியதுல் காதிரிய்யா ஆன்மீக அமைப்பின் தலைவருமான அஷ்ஷெய்ஹ் தைக்கா அஹமத் நாஸிர் ஆலிம் எமது நிலையத்திற்கு தெரிவித்தார்.

பஸ்ஹான் நவாஸ், 

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்






கருத்துரையிடுக

Blogger இயக்குவது.