வா.கிருஸ்ணா, நூருல் ஹுதா உமர், தமிழ் மிரர்

மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகளும், ஒரு டொல்பின் மீனும் இன்று (19) கரை  ஒதுங்கியுள்ளது .

இதேவேளை இன்னும் பல ஆமைகள் கடலில் கரை ஒதுங்கி  வருவதாக, இன்று கடல் தொழிலுக்கு சென்று திரும்பிய மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள், கடற் சூழல்  பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உட்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டதுடன், இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டொல்பின் உள்ளிட்ட கடலாமைகளை பகுப்பாய்விற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர்.

இதேவேளை கல்முனை மாநகர பெரிய நீலாவணை பிரதேச கடல் மற்றும் பாண்டிருப்பு பிரதேச கடற்கரையோரத்தில் மூன்று கடலாமைகள், இன்று (19) கரை ஒதுங்கியுள்ளன. 

இலங்கை கடல்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் என்ற கப்பல் தீப்பற்றி எரிந்ததை அடுத்து கரையோரங்களில் கடல்வாழ் உயிரினங்கள் கரையொதுங்கி வருகின்றன.

குறிப்பாக, இறந்த கடலாமைகளே அதிகம் கரையொதுங்குகின்றன. 

அந்த வகையில் இன்றும், இறந்த மூன்று கடலாமைகள் பாண்டிருப்பு பிரதேச கடற்கரையோரத்தில் கரை  ஒதுங்கியுள்ளன. (Siyane News)








கருத்துரையிடுக

Blogger இயக்குவது.