கம்பஹா மாவட்டம், கஹட்டோவிட்ட பிரதேசத்தில் வெள்ளத்தில் மூழ்கி மீட்கப்பட்ட 19 வயதுடைய இளைஞர் ஆகிப் அனாப் உயிரிழந்துள்ளார்.

இன்று (05) கஹட்டோவிட்ட பிரதேசத்தில் வெள்ளம் ஏற்பட்டிருந்த நிலையில் வெள்ள நீரில் மூழ்கிய ஆகிப் அனாப்  மயக்கமுற்ற நிலையில் பிரதேச மக்களால் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார்.

எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் அவரது ஜனாஸா மேலதிக விசாரணைகளுக்காகவும் பிசிஆர் சோதனைக்காகவும் வதுபிடிவல ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆகிப் அனாப் புத்தளம் மேர்சி லங்கா நிறுவனத்திர் மாணவர் என்பதுடன் பலரும் தற்போது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.