உண்மையில் உறைந்து தான் போனேனடி. தகவல் கேட்டதும் .., என் உற்ற நண்பியல்ல. இருந்தாலும் என் நண்பிகளுள் ஒருத்தி.. தைரியமானவள். அழகான அவள் சிரிப்பு இன்னும் என் கண்களில் ... ஓராண்டு பழக்கத்தில் ஒன்றிவிட்டோம். பின்னர் தோழிகளாய்.... நாட்கள் நகர்ந்தன. உளவியல் கற்று டிப்ளோமா பெற்றாள். தொலைதூரமல்ல. தொடர்பில் தானிருந்தோம்.  இன்று காலை நண்பியொருத்தியின் மூலம் அவளது கணவனின் மரணச்செய்தி கேள்வியுற்றேன். மாலைதீவில் மரணம், கொரோனா காரணம். ஜீரணிக்க முடியவில்லை. அவள்  எவ்வாறு சகிப்பாள். என்னதான் தைரியகாரி என்றாலும் , தன் கணவன் என்று வரும் போது தவிடுபொடியாகுமல்லவா..? தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியுமென்பர். அது இதுதானா..?   அருகே போய் ஆறுதல் சொல்லவேண்டும் போல் இருக்கிறது. ஆனால்..... பயணத்தடை ஒரு பக்கம், வெள்ள நீர் ஒரு பக்கம்.  யா அல்லாஹ்....!!! உன் சோதனைகளையும் வேதனைகளையும் வென்று வரும் அளவிற்கு பலசாலிகள் யாரும் இங்கு இல்லை ரஹ்மானே. எம்மை பலவீனப்படுத்தி விடாதே ரஹ்மானே... எங்கள் பலவீனத்தைக்கொண்டு எங்களை குற்றவாளிகளாக ஆக்கிவிடாதே யா ரப்பே... எங்களை பாவங்களை மன்னித்து உன் உன்னத அடியார்களாக மாறி விட கருணை செய்வாயாக...!!!         

Fayasa Fasil kahatowita.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.