கஹட்டோவிட்டவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு  உலர் உணவுப்பொருட்கள் வழங்கி உதவிக்கரம் நீட்டிய கல் எளிய வாழ் மக்களும் முயற்சியை மேற்கொண்ட சேவைமனங்கொண்ட வாலிபர்களும்

கஹட்டோவிட்டவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவுப்பொருட்கள் கொண்ட பொதி ஒன்றும் மற்றும்  குடிநீர் போத்தல் ஒன்று வீதமாக பாதிக்கப்பட்ட 70 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய உலர்உணவுப்பொதிகளை கள் எளிய வாழ் நல்லுள்ளம் படைத்த  வாலிபர்களின் முயற்சியிலும் எமது ஊர்மக்களின்   துயரங்களில் பங்கேற்று உதவி செய்யும் நற்சிந்தை கொண்ட சகோதரர்களின்  ஒத்துழைப்புடனும் இன்றைய தினத்தில் (07) எமது ஊரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவுப்பொருட்கள் கொண்ட பொதிகளை கஹட்டோவிட்டாவின் பிரபல சமூக சேவகர் அல் ஹாஜ் பிர்தௌவ்ஸ் அவர்கள்  மூலமாக  பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. 

குறித்த வாலிபர்களாகவே சமூக சேவகர் அல் ஹாஜ் பிர்தௌவ்ஸ் அவர்களின் உதவியோடு ஒவ்வொரு பாதிக்கப்பட்ட வீடுகளுக்கும் போய் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது. 

லொக்டவுன் நேரமாக இருந்தும் அனைவரும் மிகவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துவரும் வேளையிலும் தமது ஊரையோ தமது மக்களையோ பாராது அயலில் வாழும் ஊரிலுள்ள சகோதரர்களின் துன்பதுயரங்களில் பங்கு கொண்டு தம்மால் முடிந்த  உதவிகளை கொண்டு உதவி செய்தமையிட்டு கஹட்டோவிட்ட வாழ் மக்களின் சார்பிலும், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பிலும்,கஹட்டோவிட்ட நியுஸ் பேஜ் ஒபீஸியலின் சார்பிலும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இன்றைய காலத்தில் வாலிபர்கள்  வேறு ஏதேதோ  விடயங்களில் ஈடுபட்டு சமூகத்தை மறந்து சமூக சேவை என்ன என்பதை மறந்து செயற்பட்டு வரும் இக்காலகட்டத்தில் கொரோனா லொக்டவுன் காலப்பகுதியில் தமது ஊர்மக்களும்  அப்படியான பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வரும் வேளையில் அதைவிட சிரமப்படும் அயலூர் மக்களுக்கு உதவி செய்ய  முன்வந்த நல்லுள்ளம் கொண்ட வாலிபர்களின் அருமையான மிகச்சிறந்த காலத்திற்குகந்த முயற்சி நிச்சயமாக பாராட்டப்படவேண்டியதாகும். 

கள் எளிய வாழ் ஊர்மக்களின் உதவி மற்றும் ஒத்துழைப்போடு சேகரித்த பொருட்களில் இருந்து   மொத்தமாக 180 உலர் உணவுப்பொதிகளை  யும் ஒவ்வொரு பொதிகளுடனும் 5லீட்டர் தண்ணீர் போத்தல் ஒன்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு  வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு இவற்றில் கஹட்டோவிட்டாவில்  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 70 பார்சல்களையும்,நாம்புலுவையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 30 பார்சல்களையும்,ஏனையவற்றை மினுவங்கொடை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும்,லொக்டவுன் பாதிப்புக்குள்ளானவர்களில் சிலருக்கும் வழங்கியதாக குறித்த வாலிபர்கள் கஹட்டோவிட்ட நியுஸ் பேஜ் ஒபீஸியலுக்கு தெரிவித்தனர். 

அல்லாஹ் இந்த முன்மாதிரி மிக்க வாலிபர்களினதும்  நல்லுள்ளம் படைத்த கள் எளிய வாழ் மக்களின் உளத்தூய்மையான  இந்த தர்மத்தை பொறுந்திக்கொண்டு ஈருலகிலும் நற்பாக்கியங்களை பெற்று கொள்வதற்கும்  நோய்நொடிளில் இருந்து இவ்வாலிபர்களையும் கள் எளிய வாழ் மக்களையும் காப்பாற்றி நற்பாக்கியங்களையும்  செல்வ செழிப்பையும்  வல்லவன் அல்லாஹ் இதற்காக ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் வழங்குவானாகவும்   அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாகவும் என்று  ஊர்மக்கள் சார்பில் மனந்திறந்து பிரார்திக்கின்றோம். 

குறித்த வாலிபர்கள் இது தொடர்பில் படங்கள் பிடித்து விளம்பரம் செய்யவோ பெயர் புகழுக்காக இவற்றை செய்யவோ விரும்பவில்லை அவர்கள் இதை நன்மையை நாடி அல்லாஹ்வுக்காகவே செய்தார்கள் அதை அவர்களின் செயற்பாடுகள் மூலமாக அறிந்து கொள்ள முடிந்தது இருந்தாலும் இத்தகைய முன்மாதிரி மிக்க வாலிபர்களின் நற்சேவைகள் ஏனைய வாலிபர்களுக்கும் முன்மாதிரியாக அமையட்டும் என்ற நோக்கிலேயே இந்த விடயம் ஏனைய மக்களுக்கும் தெரியப்படுத்தப்படுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

குறித்த உலர் உணவுப்பொருட்பொதியில்  ஒன்றையும் தண்ணீர் போத்தல் ஒன்றையும்  கஹட்டோவிட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் சமூக சேவகர் அல் ஹாஜ் பிர்தௌவ்ஸ் அவர்களும், ஊர்மக்களுக்கு வழங்கியதை உறுதிப்படுத்துமுகமாக கஹட்டோவிட்ட நியுஸ் பேஜ்  அட்மிண்  அவர்களிடம் குறித்த வாலிபர்களால் ஒப்படைப்பதையும்,சமூக சிந்தை கொண்ட வாலிபர் குழுவினருடன்  படம் பிடித்து கொண்டதையும் படங்களில் காணலாம். 

செய்தி தொகுப்பு. 

எம்.ஆர்.லுதுபுள்ளாஹ்
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.