தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான அறிவித்தல் இன்று (22) செவ்வாய்க்கிழமை தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் தற்போதைய உப வேந்தர் எம்.எம்.எம். நாஜீமின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 8ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.

இதனையடுத்து எதிர்வரும் ஓகஸ்ட் 9ஆம் திகதி தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பேராசிரியர் ரமீஸ் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பல்கலைக்கழகத்தின் பழைய மாவணரான இவர், பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர், துறைத் தலைவர் மற்றும் பீடாதிபதி ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

நன்றி - விடியல் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.