பாடசாலை மாணவர்களுக்கு Data கட்டணமின்றி கற்பதற்கு Zoom போன்ற மென்பொருளை அறிமுகப்படுத்தவுள்ளோம் - சாணக்கியனுக்கு நாமல் பதில்

Rihmy Hakeem
By -
0

 


பாடசாலை மாணவர்கள் வீட்டிலிருந்து இணையவழியூடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இலவசமாக (Data கட்டணமின்றி) பயன்படுத்தக்கூடிய மென்பொருள் ஒன்றை எதிர்வரும் சில வாரங்களில் அறிமுகப்படுத்தவுள்ளதாக டிஜிட்டல் தொழில்நுட்ப மற்றும் நிறுவன மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த புதிய மென்பொருளானது, நிகழ்நிலை (Zoom) மென்பொருளைப் போன்றது என்றும், இலங்கையின் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு ஆகியவற்றுடன் இணைந்து இத்திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், நேற்று பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)