வரி செலுத்துபவர்களின் நிதியிலிருந்து MPகளுக்கு வாகனம் வழங்குவதற்கான முன்மொழிவை நிராகரிக்கின்றோம்

Rihmy Hakeem
By -
0


 வரி செலுத்துபவர்களின் நிதியிலிருந்து  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்குவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவை ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாங்கள் நிராகரிக்கின்றோம் என்று எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவுகின்ற  இந்த மட்டுப்படுத்தப்பட்ட நிதியத்தை அனைத்து இலங்கையர்களுக்கும் தடுப்பூசிகளை வழங்குவதற்காக பயன்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

 அரசியல்வாதிகளின் வாழ்வை செழிப்பாக்குவதற்கு மக்களுக்குரிய வளத்தை பயன்படுத்துவதற்கு  ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் அனுமதிக்காது. இதற்குப் பதிலாக அவ்வாறான வளங்களை நாட்டின் மேம்பாட்டுக்கும், அபிவிருத்திக்கும், சுபீட்சத்துக்கும் முதலீடு செய்தல் வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)