கடந்த இரு நாட்களாக சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்படுகின்ற ஒரு காதல் காவியம் பற்றி கொஞ்சம் தமிழில் எழுத நினைத்தேன்... 

Chamal Akalanka Polwaththage தனது facebook பகுதியில் எழுதியருந்த பதிவினை தழுவியே இதனை நான் பதிவிடுகின்றேன்.

2021ஆம் ஆண்டு, 

இரு தினங்களுக்கு முன், கணவரொருவர் தனது கர்ப்பிணி மனைவியை கையிலே சுமந்த வண்ணம் 22 கிலோமீட்டர் தூரம் நீரிலே நடந்து சென்றது பற்றிய ஒரு செய்தி இலங்கை ஊடகங்களில் வெளியாகின்றது. 

அந்த இளைஞனின் துணிச்சலையும் மனைவி மீதான எல்லை கடந்த அன்பினையும் பாராட்டுகின்ற அதே தருணம், 

இந்த சம்பவத்தை கேட்டு பார்த்துவிட்டு உண்மையான காதலின் நாமம் கொண்டு கவிதையொன்றினை எழுதிவிட்டு எம்மால் மகிழ்ச்சி அடைய முடியுமா??

அந்த இளைஞன் கூறுகிறார் "தான் ஹினிதும வைத்தியசாலைக்கு சென்றபோது மனைவியை உடுகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்கள். நீர்மட்டம் அதிகமாக இருக்கின்றமையால் அம்பியூலன்ஸ் ஒன்றினை தர முடியாது என்றார்கள்..." 

வரிப்பணம் செலுத்துகின்ற இலங்கையர்களாகிய நாங்கள் வெள்ள நாட்களில் அம்பியூலன்ஸில் செல்ல முடியாது போனால் இறந்துவிட வேண்டுமா?? 
இப்படியா எங்கள் தலைவிதி அமைந்துவிட வேண்டும்??

கர்ப்பிணித்தாய் ஒருவறை வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்ல தோனி ஒன்றையாவது நம்மால் தேடி வழங்கி உதவ முடியாமல் போயுள்ளது!!

நாம் வரி செலுத்தி பராமரித்து வருகின்றது இடர் முகாமைத்துவ நிலையம் எங்கே?? 
படகுகளில் சென்று அரிசி, சீனி வழங்குவது மட்டுமே இடர் முகாமைத்துவம் என இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான்  நாம் நினைத்துக் கொண்டிருப்பது... 

அரசு மீதான குற்றச்சாட்டுக்களை ஒருபுறம் வைப்போம்.. 

வெள்ள அனர்த்தங்களின் போது தனது உயிரை கூட துச்சமாக நினைத்து நீரில் குதித்து மக்களைக் காப்பாற்றுகின்ற மக்களை கடந்த பல வருடங்களாக நாம்  கண்கூடாகவே கண்டுள்ளோனம்.
வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு கடையில் உள்ள இராக்கைகள் காலியாகும் வரை பொருட்களை வாங்கி வாரி வழ்ங்குபவர்களையும், தனது பகல் இரவு உணவினை அந்த மக்களுக்காக வழங்குபவர்களையும் கூட கண்டுள்ளோம்....

அவர்கள் எல்லாம் எங்கே?? 

நீரில் மனைவியை தூக்கி செல்கின்ற இந்த ஜோடியிணை கண்ட எவரும் ஏன் பொலிசாருக்கு இதுபற்றி அறிவிக்கவில்லை. குறித்த வீடியோவில் முழங்கால் அளவிற்கு மாத்திரமே தண்ணீர் உள்ளதென நன்றாகவே தெரிகிறது. மேலும் தூக்கிக் கொண்டு செல்வதை கண்டாலே தெரியும் இவர்கள் நோயாளிகள் அல்லது வேறு ஏதேனும் பிரச்சினைகள் காரணமாகவே செல்கின்றார்கள் என்று, அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் தூக்கிச்செல்லும் வீடியோ ஒன்று மாத்திரம் எவ்வாறு கிடைத்தது? 

நாம் தவறிழைத்த எங்கே?? 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புத்ததாச மன்னன் விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒரு மருத்துவமனையை கட்டியது பற்றி நாங்கள் வரலாற்றில் கற்கின்றோம்....
வெள்ளத்தில் 22 கிலோமீட்டர் தூரம் கர்ப்பிணித்தாய் ஒன்றை தூக்கிச் செல்கின்ற கணவன் பற்றிய ஒரு கதையினை 2021 ஆம் ஆண்டு நாம் படிக்கின்றோம்....

அதனிடையே... 

பல பில்லியன் பெறுமதியான வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக அமைச்சர்கள் தயாரானபோது மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாவெறுப்புடன் அதனை நிறுத்திவிட்டு தமக்கான வாகனத்தை இறக்குமதி செய்வதன் நன்மைகளை விளக்குகின்ற பல கதைகளையும் கேட்கின்றோம்.... 

நம் மக்கள் பிரதிநிதிகள் அந்த கர்ப்பிணித் தாய்க்கு பிறக்கவுள்ள குழந்தையினை கூட கடன் சுமையில் ஆழ்த்தி, அந்த இருவரும் உண்கின்ற அரிசி, மா மற்றும் சீனியில் இருந்து பெறுகின்ற வரிப்பணத்தின் மூலம் சிங்கப்பூர், அமெரிக்கா சென்று குளிர் காய்ச்சலுக்காக மருந்து வாங்குவதனையும் காண்கின்றோம். 

பியுமி பாதுகாப்பு அமைச்சரை தொடர்பு கொண்டு ஆடை அணிகலன், மேக்கப் பொருட்களை Delivery செய்து கொள்கின்றார்...
இந்த இளைஞனுக்கு முடியுமா பாதுகாப்பு அமைச்சரை தொடர்பு கொண்டு மூங்கில் தோனி ஒன்றையாவது பெற்றுக்கொள்ள?? 

அந்த இளைஞனின் காதலை கவிதையகளாக வடிப்பவர்களே, உங்களுக்கும் எனக்கும் நாளை இது போன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அரசாங்கம் எமக்காக ஹெலிகாப்டர் அனுப்புவார்களா...?? 
குறைந்தபட்சம் ஒரு மோட்டார் படகு..??
இல்லையேல் குழந்தையினை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் இருந்தால் சிங்கப்பூர் அனுப்புவார்களா..?? 

அவர்கள் மீது கவிதை மழை பொழிகின்றவர்களும் நீங்களும் நானும் ஏன் நாளை பிறக்கவிருக்கின்ற அந்தக் குழந்தையும் நின்று கொண்டிருப்பது ஒரே படகிலே தான்..... 

ஆனால் எமக்கு கடந்துசெல்ல படகொன்று தான் இல்லை..!!!  
Shabeer Mohammed 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.