ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை

இலங்கையில் மக்களின் அன்றாட வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டு இக்கட்டான நிலையை அடைந்துள்ளது.

சகல துறைகளினதும் பின்னடைவு அச்சமடையும் எதிர் காலத்தை சுட்டிக்காட்டுகிறது.

கொவிட் வைரஸை கட்டுப்படுத்தலில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது.தடுப்பூசி வழங்கப்படுவது எத்தகைய விஞ்ஞான ரீதியான முறைகளிலுமன்று.அந்தந்தப் பிரதேசங்களில் ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் தமது சனரஞ்சகத்தை கட்டியொழுப்பும் விதமாக தடுப்பூசி விடயத்தை கையாள்கின்றனர்.தடுப்பூசி அரசியலமயமாக்கப்பட்டமை பாரிய துரதிஷ்டமாகும்.

நாட்டின் பெருளாதாரம் நாளுக்கு நாள் பலமிழந்து வருகிறது.அந்நிய செலாவனியைப் பெற்றுத் தரும் ஆடைத் தொழில் துறையில் கடமையாற்றும் பலருக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் சென்றுள்ளது.இறக்குமதி வரையறுக்கப்பட்டதால்,

உற்ப்பத்தி தொழில் துறைக்கு தேவையான பொருட்கள் இன்மையால் சிறு உற்ப்பத்தித் துறை பலதும் முடங்கியுள்ளன.

திட்டமிடப்படாத முடிவுகளால் விவசாய உற்ப்த்திற்கும் பாரிய ஆபத்து நேரிட்டுள்ளது.இரசாயனப் பசளை இறக்குமதி கைவிட எடுத்த தீர்மானத்தால் நெல் அறுவடை மற்றும் சிறு உற்பத்தி அறுவடைத் துறைக்கு பாரிய ஆபத்து நேரிட்டுள்ளது.

இரசாயனப் பசளைக்குப் பகரமாக காபனிக் பசளை இறக்குமதிக்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கை பிரிதொரு சிக்கலை உருவாக்கியுள்ளது.சீன நகர கழிவுகள் காபனிக் பசளைகளாக இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவெடுக்குமாக இருந்தால் அதன் ஆபத்துகளின் பின்விளைவுகள் பலவற்றிற்கு முகம் கொடுக்க நேரிடும் துறைசார் நிபுணர்கள் தற்போதே சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொவிட் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தலுக்கு விஞ்ஞான ரீதியான விடயங்களையும் சுகாதார தரப்பின் வழிகாட்டல்களையும் புறமொதுக்கியதால் அடுத்த தலைமுறையினரும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி இருக்க மாட்டாது.

இரு துறைமுகங்கள் அனுமதிக்காத கப்பலை எங்களுடைய சமுத்திர வலயத்திற்குள் நுழைய அனுமதித்தன் காரணமாக சமுத்திர வலயத்திற்குள் எண்ணிப்பார்க்க முடியாத விளைவுகளை தோற்றுவித்துள்ளது.

சீனா போன்ற நாட்டிலிருந்து காபனிக் பசளையாக நகர் புற கழிவுகள் இறக்குமதி செய்வது நிலத்திற்கு மாத்திரமல்லாது மனிதனையும் பாதிக்கும் பக்டீரியா கூட தாக்குவதற்கான வாய்ப்புகள் உண்டு.

அவ்வாறான விடயங்களுக்கு இடமளிக்கமாட்டோம் என்பதற்கு அரசாங்கம் வழங்கும் உத்தரவாதம் என்ன? இந்த வேலைத் திட்டத்தையும் தமது கஜமித்துரு நண்பர்களுக்கு வழங்கியுள்ளதால் இதன் நோக்கம் சரியாக வெளிப்படுகிறது.சீனக் குப்பைகளை நாட்டிற்கு கொண்டு வந்தேனும் கஜமித்துரு நண்பர்களின் எதிர்கால பொருளாதார நலன்களை வலுப்படுத்தவே முயற்சிக்கின்றனர்.

அரசாங்கத்திற்கு அந்நியசெலாவனி இன்மையால் இரசாயப் பசளை இறக்குமதி தடை செய்யப்பட்டு கடன் அடிப்படையில் காபனிக் பசளை கொண்டுவரப்பட்டு இரசாயனப் பசளையை விடவும் கூடிய ஆபத்தான கஷ்டங்களில் விவசாயிகளை தள்ளிவிட வேண்டாம் என்று நாட்டு மக்களின் பெயரால் வேண்டிக் கொள்கிறோம்.

தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வட்டி முதலாலியிடமிருந்து கடன் பெற்றுக் கொள்ளும் நிலைக்கும் அதனால் ஏற்படப்போகும் விபரீதங்களுக்குள்ளும் நாட்டை தள்ளியுள்ளனர்.கடனையும் வட்டியையும் அடைக்க முடியாமல் போகும் போது சொத்துக்களை அடகு வைக்கும் நிலை ஏற்படும்.அரசாங்கம் இவ்வாறே இன்று நடந்து கொள்கிறது.நாட்டின் 

எதிர்காலதலைமுறையினருக்கு சொந்தமாக வேண்டியதை அடகு வைக்கப்படுவதை வன்மையாக எதிர்க்கிறோம்.நாட்டின் எதிர்கால தலைமுறையினரின் பெயரில் இந்தக் காட்டிக் கொடுப்பை நிறுத்துமாறு அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டுகிறோம்.

கொவிட் வைரஸ் காரணமாக பீடிக்கப்பட்டுள்ள நாட்டை அதிலிருந்து மீட்பதற்குப் பகரமாக மீண்டும் புதிய புதிய பிரச்சிணைகளை உருவாக்குவதை விட்டும் தூரமகுமாறு ஐக்கிய மக்கள் சக்தியினராகிய நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.