இலங்கை-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி20 கிரிக்கெட் போட்டி கார்டிப்பில் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.

இலங்கை நேரப்படி இன்று இரவு 11.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குசல் பெரேரா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி மூன்று ரி20 கிரிக்கெட் போட்கள் மற்றும் 3 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்தப்போட்டியில் நடுவராக முதல் முறையாக அந்நாட்டு பெண் ஒருவர் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இயான் மோர்கன் தலைமையில் களம் இறங்கும் இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜாசன்ராய், மொயீன் அலி, டேவிட் மலான் என்று அதிரடி பட்டாளங்கள் இருப்பதால்  இலங்கைக்கு அணிக்கு இந்தப் போட்டி கடும் சவாலாக அமையுமா?

அரசாங்க தகவல் திணைக்களம் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.