நாவலப்பிட்டிய, தங்காலை மற்றும் வெலிகம நகர சபை தலைவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களாக தற்போது இல்லாதமையினால் அவர்கள் குறித்த பிரதேச சபைகளின் பதவிகளை கைவிட்டவர்களாக கருதப்படுகின்றனர்.

அவர்கள் கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி மூலம் தெரிவாகி இருந்ததுடன், கடந்த பொதுத்தேர்தலில் இருந்து ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் அவ்வாறான 70 உறுப்பினர்களை ஐக்கிய தேசிய கட்சி நீக்கியுள்ளது. அதற்கு எதிராக 69 உறுப்பினர்கள் தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்ட நிலையில் அந்த இடத்திற்கு புதிய 70 உறுப்பினர்களை நியமிக்க ஐக்கிய தேசிய கட்சி நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.