இன்றை(12) ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உதவி செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்த கருத்துக்கள்;

இன்று, கல்வி மட்டுமல்ல, இந்த நாட்டில் குழந்தைகளின் உரிமைகளும் வீழ்ச்சியடைந்து வருகின்றனர். 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது குறித்த பேச்சு பலத்த கருத்தாடல்களை ஏற்ப்படுத்தி நிற்கிறது. சிறுமி ஏலம் விடப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக ஏராளமான சந்தேக நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

விசாரணைகள் நிறுத்தப் போகின்றன என்று சமூக ஊடக வலையமைப்புகள் கூறுகின்றன. கற்பழிப்பு, ஏலம், விற்பனை, பாலியல் சுரண்டல் போன்ற குற்றச்சாட்டுகளின் மீதான கைதுகள் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறியப்படுகிறது. ஐக்கிய மக்கள் சக்தி இதற்கு பூரண எதிர்ப்பைத் தெரிவிக்கிறது.

இந்த சிறுமி தொடர்பாக கைது செய்யப்பட்ட எவரையும் விடுவிக்க வேண்டாம்.கைது செய்பவர்களை விடுவிக்கும் பழக்கம் இந்த அரசாங்கத்தில் உள்ளது. இவ்வாறான சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பதை நான் அறிந்திருக்கிறேன். நான்கு பேருக்கு பினை வழங்கப்பட்டுள்ளது.இதில் இரண்டு மாணிக்கல் தொழிலதிபர்களுக்கும், இரானுவ வைத்தியர் ஒருவரும் பிரதேச சபையின் தவிசாளரும் உள்ளடங்குகிறார். உயர் மட்டத்தில் அழுத்தம் இருக்கிறதா அல்லது பணத்துக்காகவா என்று நாம் கேட்க வேண்டும். தேசிய பாதுகாப்பு என்றால் இராணுவ பாதுகாப்பு மட்டுமல்ல, இந்த நாட்டின்  பாதுகாப்பு என்பது குழந்தைகளினதும் பெண்களினதும்  பாதுகாப்பும் தான்.சுதந்திரமாக செய்படும் பாதுகாப்பு அனைவருக்கும் இருக்க வேண்டும். பொது மக்கள் மற்றும் குழந்தைகளுடன் விளையாட வேண்டாம் என்று பெறுப்புள்ள உரிய தரப்பிடம் கோருகிறோம்.

க.பொ.த.சாதார தரம் மற்றும் உயர் தர தேர்வுகளுக்கான திகதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் கூறினார். உயர்கல்விக்குத் தேவையான அடிப்படை போதனைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், இது தொடர்பாக சிக்கல்கள் உள்ளன.முழு பாட அலகும் பூரணப்படுத்தப்பட்டுள்ளதா என்ற விடயத்தில் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா?

முதலாம் தடவை தேர்வுக்கு தோற்றும் மாணவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

ஆசிரியர்கள் இன்று முதல் இணைய வழிக் கற்பித்தலிலிருந்து விலகுகிறார்கள். ஐக்கிய மக்கள் சக்தியின் எங்கள் ஆசிரியர் சங்கமும் அதை ஆதரிக்கிறது, ஏனெனில் ஆசிரியர்கள் கொடுக்கும் எந்த ஏற்ப்பாடுகளையும் அரசாங்கம் கொடுக்கவில்லை, அவர்களின் தொழில் உரிமைகளுக்காக போராடியவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. சம்பள முரண்பாடுகளை வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்தது. இப்போது ஒரு வருடம் ஆகிறது, அதற்கான எந்த ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்யவில்லை. ஆசிரியர்களுக்கு தொலைதூரக் கல்வி சார்ந்த விடயங்களுக்கு எந்த வசதிகளும் வழங்கப்படவில்லை, ஆனால் ஆசிரியர்களை மேற்பார்வையிட வேண்டும் என்று அரசாங்கம் கூறுகிறது. இது எந்தப் பயிற்சிகளும் வழங்காமல் கூறப்படுகிறது. ஆசிரியர்கள் வீதிகளில் இறங்கும்போது, ​​ இணைய கற்பித்தலுக்கு கற்பிக்கும் இலங்கையில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே இருந்தால் நல்லது என அமைச்சர் திலும் அமுனுகம கூறுகிறார்.மழை காலத்தில் ஒரு நாளேனும் பாடசாலை சென்றாரே என்னவே என்று அவரிடம் வினவத் தோன்றுகிறது.

பாதுகாப்புப் படையினருக்கு உயர் கல்வியை வழங்குவதற்காக சேர் ஜோன் கொத்தலாவல அகடமியைத் தொடங்கினார். ஐக்கிய மக்கள் சக்தி இந்தப் பல்கலைக் கழகத்திற்கு எதிரானதல்ல. ஆனால் ஒரு விடயத்தில் எதிர்க்கிறோம்.முழுமையாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதை எதிர்க்கிறோம்.இது அனைத்து பாடசாலைகளையும் இணைக்கும் முயற்சி மறைமுக உள்ளது. மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் கருத்துக்கள்ளை அடக்கும் முயற்சியாக நாங்கள் பார்க்கிறோம்.பல்கலைக்கழக மாணவ ஒன்றியங்களையும் மாணவர்களின் அரசியல் கருத்தியல்களையும் ஒடுக்கும் முயற்சி இது.நாங்கள் கொத்தலாவலை பல்கலைக்கழகத்திற்கு  எதிரானவர்கள் அல்ல.இந்த சட்ட மூலத்திற்கே நாங்கள் எதிரானவர்கள்.

இந்த அரசு 19 கல்வியல் கல்லூரிகளுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கிறது. கல்வி அமைச்சின்  செயலாளரின் தோவைகளுக்கு ஏற்பவே இது முன்னெடுக்கப்படுவதாக அறியமுடிகிறது. எனவே, என்ன நடக்கப்போகிறது என்று கற்பனை செய்யக்கூடியவர்களுக்கு விளங்கும்.நினைத்த விதமாக எவருக்கும் ஒரு பட்டம் வழங்க முடியாது.

இன்று 2017,2018 ஆம் கல்வி ஆண்டுகளுக்கான ஆட்சோர்ப்புகள் இன்னும் இடம் பெறவில்லை.அவ்வாறே 2017 ஆம் ஆண்டு கல்வியாண்டுக்காண இறுதிப் பரிட்சை இன்னும் இடம் பெறவில்லை.மீள் பரீட்சைகளும் இன்னும் இடம் பெறவில்லை.இவற்றை உரிய தரப்பு கவனத்தில் கொள்ள வேண்டும். 

சமீபத்திய போராட்டங்கள் தொடர்பாக பொது மக்கள் கைது செய்யப்பட்ட பிறகும், அத்தகைய கைதிகளை உடனடியாகவும் கட்டாயமாகவும் தனிமைப்படுத்துவதற்கு எடுத்த முடிவு முற்றிலும் பொருத்தமற்ற சட்ட நடவடிக்கையாகும்.பொது கல்விசார் சங்கங்களின் பிரதிநிதிகளும் கைது செய்யப்பட்டு தற்போது தனிமைப்படுத்தல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், உடனடியாக அவர்களை விடுவிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்.  உரிமை மீறல் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு சட்ட ரீதியாக சவால் விடுத்துள்ளது ஐக்கிய மக்கள் சக்தி.

கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழ சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் கொழும்பு ரோயல் கல்லூரி,ஆனந்தக் கல்லூரி,மஹநாம கல்லூரி போன்ற கல்லூரிகளும் பாதுகாப்பு அமைச்சால் நிர்வகிக்கப்படும் நிலை உருவாகலாம்.

கல்வியல் கல்லூரிகளை தேசிய கல்வி நிறுவகத்திற்கு கீழ் கொண்டு வராமல் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வந்து கல்வியின் தரத்தைப் போனுங்கள்.தேசியக் கல்வி நிறுவகத்தின் இலக்கும் செயற்பாடுகளும் வேறுபட்டவை.இவற்றின் புரிதல் கல்வி அமைச்சரிடம் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.