அரசாங்கத்திற்கு 5000 ரூபாவைக் கூட மக்களுக்கு சரியான முறையில் வழங்க முடியவில்லை. லீசிங் கட்டணங்கள், வங்கிக்கடன்கள், சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகள் அரசிற்கு செலுத்த வேண்டிய வரிகள் தொடர்பில் நிவாரணம் வழங்குமாறு அரசாங்கம் வங்கிகளுக்கு சுற்றுநிருபம் அனுப்பிய போதும் அவை நடைமுறைப்படுத்தப்பட்டதாக தெரியவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (03) தெரிவித்தார். 

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகளை லீசிங் முறையில் வாங்கிய வசதி குறைந்த மக்கள் அவற்றை செலுத்த முடியாமல் போனதால் அவர்களது வாகனங்களை அந்த நிறுவனங்கள் கொண்டு சென்றதனையும் காண முடிந்தது. 

அதே போன்று மின் கட்டணம் மற்றும் நீர்க்கட்டணங்களுக்கு சலுகை வழங்குவதாக கூறப்பட்ட போதிலும் இன்று சில வீடுகளுக்கு Red Bill வந்துள்ளன. 

கஷ்டப்படும் மக்களுக்கு எவ்வித சலுகைகளையும் வழங்குவதற்கு அரசாங்கத்தினால் முடியாமல் சென்றுள்ளதனை இது காட்டுகிறது. 

எனினும் 1.5 பில்லியன் ரூபா வரி செலுத்தவில்லை என்பதற்காக 2018 ஆம் ஆண்டு அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்ட மெண்டிஸ் மதுபான தயாரிப்பு நிறுவனத்திற்கு மீண்டும் நேற்று முதல் (02) செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அருண பத்திரிகை தெரிவித்துள்ளது.

அந்த நிறுவனம் மத்திய வங்கி மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின் நிறுவனம் ஆகும். இதன் பின்னணியில் அண்மையில் பாராளுமன்றம் சென்ற நபருக்கும் அரசுக்கும் இடையில் டீல் இருப்பதாக தெளிவாக சந்தேகிக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார். (Siyane News)

විපක්ෂ නායක කාර්යාලයේ පැවැත්වෙන මාධ්‍ය හමුව සජීවීව

විපක්ෂ නායක කාර්යාලයේ පැවැත්වෙන මාධ්‍ය හමුව සජීවීව

Posted by SJB - Api on Friday, July 2, 2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.