கம்பஹா மாவட்டத்தில் "பள்ளி - பன்சலை இடையில் பாலம் அமைப்போம்" என்ற தொனிப்பொருளிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் (10) களனி வித்யாலங்கார பிரிவெனாவில் இடம்பெற்றது. 

பிரிவெனாவின் தலைவரும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பேராசிரியர் கும்புறுகமுவ வஜிர தேரரின் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில்,

 முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப், பிரதமரின் முஸ்லிம் விவகார இணைப்பதிகாரியும் சர்வமத சகவாழ்வு குழுவின் தலைவர் அஸ்ஸெய்யித் ஹசன் மௌலானா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் மௌலவி ஏ.எம்.ரிஸ்மி, திஹாரியை சேர்ந்த ஷெய்க் M.M.M. முனீர், திஹாரிய மஸ்ஜிதுர் ரவ்ழா ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் ஜனாப் M.S.M. நிலாம், கஹட்டோவிட்ட, ஓகொடபொல, உடுகொட (KOU) ஜம்இய்யதுல் உலமா கிளை தலைவர் மௌலவி A.M.M. அப்துல் சலாம், கஹட்டோவிட்ட மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் M.U.M. ருஷ்தி, ஷெய்க் M.H.M.ஷாபி ஹுஸைன் - மள்வானை, ஜனாப் M.F.M. பைஸால் -  உப தலைவர், ரக்ஷ்பான ஜும்ஆ பள்ளிவாசல்  மள்வானை, ஜனாப் A.C.H. ஷிப்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.