கெபிடல் மகாராஜா குழுமத்தின் தலைவரும், நம்முடைய நெருங்கிய நண்பருமாகவுமுள்ள, இலங்கையின் கீர்த்தி மிக்க புத்திரரான ஆர்.ராஜ மஹேந்திரனின் மறைவு எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அவரின் மறைவு பொதுவாக முழு நாட்டிற்கும் தனிப்பட்ட முறையில் எங்களுக்கும் ஒரு பெரிய துக்கமும் ஆழ்ந்த வருத்தத்திற்குமுரிய ஒரு காரணமாகும்.அவருக்கும் எனக்கும் ஒரு நீண்ட நட்பு இருந்தது, குறிப்பாக அவர் ஒரு வாழ்நாள் நண்பர், அவர் எனது தந்தையின் பல விவகாரங்களில் விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்தவர்.அவர்கள் இருவருக்கும் இடையே மிக நெருக்கமான உறவு இருந்தது.

இதன் மேலொழுந்த நட்பு எனக்கு எப்போதுமே மகத்தான ஆதரவைப் பெற்றுக் கொடுத்தது.அவருக்கும் எங்களுக்கும் இடையிலான பெரிய பிணைப்பு மிகவும் வலுவான மற்றும் நல்லுறவால் மேம்பட்டதாகும். அவரது உன்னதமான மனித குணங்களால் அவரது மறைவு நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த எதிர்பாராத மறைவால் ஆழ்ந்த துன்பத்தில் இருக்கும் அவரது அன்பு மனைவி, அன்பான மகன்கள், அன்பான மகள் மற்றும் அனைத்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனதும் எனது குடும்பத்தினதும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு.ராஜமஹேந்திரன் கெபிடல் மகாராஜா குழுமத்தின் தலைவராக இருந்ததோடு, தனது நிறுவனங்களின் மேம்பாட்டிற்காகவும், அந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவும் அயராது உழைத்த ஒரு நிறுவனத்தின் உரிமையாளராக இருந்தார்.

நாட்டின் முன்னணி ஊடகங்களின் ஒன்றின் உரிமையாளரான இவர், ஒரு மூத்த முன்னோடி ஆவார், எல்லா சவால்களையும் எதிர்கொண்டு பக்கச்சார்பற்ற முறையில், உண்மையாக, தைரியமாக செயல்பட ஊடகங்களுக்கு எப்போதும் சுதந்திரம் அளித்துள்ளார்.

தாம் நம்புகின்ற கொள்கை மற்றும் தத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் பயணிக்கின்ற போது அவர் எதிர்கொள்கின்ற சவால்களை துச்சமாக கணித்து அவரும் அவரின் குழுவும் முன்னோக்கிச் சென்ற பயணமானது நமபகத்தன்மையாதும் தனித்துவமானதுமாகும். 

சத்தியத்தை நிலைநாட்டுவதற்கு அவரும் அவரின் ஊடகங்களும் செயற்பட்ட போது எதிர்கொண்ட சவால்கள் அற்பமானவை அல்ல. எந்தளவு அச்சுறுத்தல்கள் வந்தாலும் சவால்களை முன்வைத்தாலும் அவரையும் அவரது ஊடகத்தையும் மௌனிக்கச் செய்ய முடியவில்லை. அவர் தமது அணியை பாதுகாத்துக்கொள்வதற்கு செயற்பட்ட விதமும் அர்பணிப்பும் ஒரு உண்மையான தலைவரின் தன்மையை வெளிக்காட்டி நிற்கின்றது. 

தமது நிறுவனங்களில் பணிபுரிகின்ற உயர் மட்ட அதிகாரிகள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை அனைவரையும் சம அடிப்படையில் கவனித்துக்கொண்டதோடு அவர்களின் வாழ்வதாரத்தை மேம்படுத்துவதற்கு தனிப்பட்ட முறையிலும் செயற்பட்டுள்ள சந்தர்ப்பங்கள் ஏராளம்.

கெபிட்டல் மகா ராஜா நிறுவனம் மத ஒற்றுமை, நல்லிணக்கம்,சகவாழ்வு என்பவற்றை மேம்படுத்துவதற்காக தலைமைத்துவத்தை வழங்கியவராக ராஜ மஹேந்திரன் உள்ளார். 

இலங்கையில் உள்ள ஊடகங்களில் சமூக சேவைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை செயற்படுத்திய முதன் முதல் ஊடக நிறுவனம் சிரச நிறுவனமாகும். அது ராஜ மஹேந்திரனின் சிந்தனைப் போக்கோடும் பூரண தலைமைத்துவத்தோடும் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடாகும். கம்மெத்த, சிரச சஹன யாத்திரா என்பன அவற்றுக்கு வெளிப்படையான சான்றுகளாகும். இவை அனைத்தும்  இலங்கையை அழகுபடுத்துகின்ற செயற்பாடு என்பதோடு அவ்வாறான ஒரு இலங்கை நாட்டை காண வேண்டும் என்பது அவரது இலக்கு என்பது உண்மையாகும். அதற்காக அவர் அவரால் முடிந்தளவு போரராட்டங்களை முன்னெடுத்தார். 

அந்தப் போராட்டம் இடைவிடப்படாது தொடர்ந்தது.

ஒரு நாகரீமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒருமித்த எதிர்பார்ப்பை கைவிடாமல் தமது ஊடகத்தின் ஊடாக பாரிய சமூக போராட்டம் ஒன்றை ஆரம்பித்து வைத்தார். அவர் நல்லிணக்கத்தில் பூரணமான ஒரு அழகிய ஒரு நாட்டையே அவர் எதிர்பார்த்தார். அதற்காக அவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். அழிவுகள் ஆபத்துக்கள் ஏற்பட்ட உடனே அதற்காக உடனடியாகவும் விரைவாகவும் தலையிட்டு மக்களின் நலனுக்காகவும் மக்கள் பணிக்காகவும் சிரச ஊடக வலையமைப்பு செயற்படுவதற்கு அவரிடம் கிடைத்த ஆலேசனைகளும் ஆசிர்வாதமும் முக்கியமானதாகும். 

இந்த நாட்டின் வர்த்தக துறைக்கு ஊடகத்துறைக்கு கலைத்துறைக்கு விளையாட்டுத்துறைக்கு அரசியல்துறைக்கு என பல்வேறுதுறைகளுக்கு மாத்திரமல்லாமல் உண்மையை வெளிப்படுத்துவதற்காக நாட்டு மக்களின் தேவைகளுக்காகவும் அவர் ஆற்றிய சேவைகளை ஒரு போதும் மறக்க முடியாதவை.

அத்தகைய ஒரு தனித்துவமாக மகத்தான பணியை செய்த மாமனிதரின் மறைவு என்பது தாங்க முடியாத ஒரு சோகத்தை ஏற்படுத்துகின்றது. 

ராஜ மஹேந்திரன் அவர்களே! 

உமக்கும் எமக்குமுள்ள  நட்பின் வெளிப்பாட்டை நினைவு கூர்வதோடு உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றேன்.


சஜித் பிரேமதாச 

எதிர்க் கட்சித் தலைவர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.