"அமைச்சர் விமல் வீரவன்ச கொத்தலாவலை பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ள தற்போது கூறியிருந்தாலும் வாக்கெடுப்பின் போது எந்தப்பக்கம் வாக்களிப்பார் என்று கூற முடியாது" என்று ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணாயக்கார தெரிவித்தார்.

இன்றைய தினம் (12) எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எமது சியன நியூஸ் சார்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

"நாங்கள் கூறுவது என்னவெனின் இலவசக் கல்வி மீது பற்று இருந்தால், பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கரிசனை இருந்தால் கல்வியை இராணுவமயமாக்குவதற்கு எதிர்ப்பு இருந்தால், கல்விக் கடைகளை போடுவதற்கு எதிர்ப்பு இருந்தால் குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் எதிர்க்க வேண்டும். அதுவே இந்த நாட்டின் மீது பற்றுள்ள "தேசப்பிரேமி" ஆக நிரூபிப்பதற்கான சரியான சந்தர்ப்பம்" என்று அவர் மேலும் தெரிவித்தார். 

(Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.