நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, சவூதி அரேபிய சுற்றுலாத்துறை அமைச்சர் அஹ்மத் அல் கதீப் உடன் Zoom தொழில்நுட்பம் மூலம் கலந்துரையாடினார். 

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள சுற்றுலாத்துறையினை மீளக்கட்டியெழுப்புவதற்கு இணைந்த வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த குறித்த கலந்துரையாடலில்  இரு நாட்டு அமைச்சர்களும் இணங்கியுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில வருடங்களாக அபாயகரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இலங்கையில் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவதற்கு தமது அரசாங்கம் மேற்கொள்ளும் வேலைத்திட்டங்கள் குறித்து சவூதி சுற்றுலாத்துறை அமைச்சர் விளக்கியதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

மேலும் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப இலங்கை தற்போது முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தான் வேண்டுகோள் விடுத்ததாகவும், அதற்கு பதிலளித்த சவூதி அமைச்சர் தமது நாடு என்றும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் 2022 இல் உலகளாவிய ரீதியில் சுற்றுலாத்துறை வழமைக்கு திரும்பும் எனவும் தெரிவித்ததாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.