ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களை கஷ்டத்தில் ஆழ்த்தியுள்ள கல்விப் பிரச்சினைக்கு தீர்வை கொடு, ஆசிரியர் அதிபர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வை கொடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்று (22) கொழும்பில் எதிர்ப்பு பேரணியொன்றை நடாத்தியிருந்தனர்.

30 அளவிலான ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் இணைந்து நடாத்திய இந்த எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டவர்கள் கொழும்பு கோட்டையில் இருந்து ஜனாதிபதி செயலகத்தை நோக்கி சென்றதுடன் அங்கு பேச்சுவார்த்தைக்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அதில் ஆசிரியர் சங்கங்களின் செயலாளர்களான ஜோசப் ஸ்டாலின், மஹிந்த ஜயசிங்க, யல்வெல பஞ்சசேகர ஆகியோர் பங்கேற்றனர்.

அதன் பிரதிபலனாக சம்பள முரண்பாட்டிற்கு தீர்வை வழங்குவதற்காக அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பதற்கு செவ்வாய்க்கிழமை கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுடன் ஒரு பேச்சுவார்த்தை மற்றும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பத்தை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்க பொதுச்செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

எனினும் இது தொடர்பில் பூரண நம்பிக்கை இல்லை எனவும் சரியான தீர்வு கிட்டும் வரை Online கற்பித்தலில் இருந்து தொடர்ந்தும் விலகி இருப்பதாகவும் மாவட்ட ரீதியிலான எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(Siyane News)










கருத்துரையிடுக

Blogger இயக்குவது.