சுற்றுலா இந்தியா கிரிக்கெட் அணிக்கும் இலங்கை அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் இன்று நடை பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இந்திய அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றது.

அணியின் சார்பில் பிரித்திவ் ஷா 49 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். சஞ்சு சம்சன் 46 ஓட்டங்களையும், சூரியகுமார் யாதவ் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய 3 விக்கெட்டுக்களையும், பிரவீன் ஜயவிக்கிரம 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

போட்டியின் 23 ஆவது ஓவரில் மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டியை 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்த நடுவர்கள் தீர்மானித்தனர்

அதற்கமைவாக பதிலுக்கு துடுப்பொடுத்தாடிய இலங்கை அணி 39 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 227 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது இலங்கை அணி சார்ப்பில் அவிஸ்க பெர்ணான்டோ 76 ஓட்டங்களையும் பானுக ராஜபக்ஷ 65 ஓட்டங்களையும் பெற்றனர்.
இருப்பினும் மூன்று போட்டிகளைக்கொண்ட இத்தொடரில் இந்திய அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று தொடரைக்கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

9 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில்  இந்திய அணியை இலங்கை அணி வெற்றிகொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

-அரசாங்க தகவல் திணைக்களம்- 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.