மீண்டும் பொருளாதாரத்தில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டுமாயின் லொக்டவுன் நீக்கப்பட வேண்டும் - கப்ரால்

Rihmy Hakeem
By -
0


 கொவிட் 19 தொற்று நிலைமைக்கு மத்தியில் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை குறைத்து மீண்டும் பொருளாதாரத்தில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டுமாயின் நாட்டில்  வழமையான நிலையை ஏற்படுத்த வேண்டும்.

இதற்காக  நாட்டில் தற்போதுள்ள  முடக்க நிலை நீக்கப்பட வேண்டும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
 
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (02) இடம்பெற்ற ஊடக கலந்துரையாடல் ஒன்றின் போது இவ்வாறு தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர்  ,எரிபொருள் விலை அதிகரிப்பினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினையை, மக்களின் உணர்வறிந்த அரசாங்கம் என்ற ரீதியில் நன்கு அறிந்துள்ளதாகவும் கூறினார்.
 
எதிர்காலத்தில் உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்தவுடன், அதன் நிவாரணத்தை உடனடியாக மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார். (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)