முழு மனித சமூகத்திற்கும் ஈமானியப் பாடம் சொல்லித் தந்து இஸ்லாமிய மார்க்கத்தின் தாற்பரியத்தை தியாகத்தின் மூலம் முழு உலகிற்கும் கற்றுத் தரும் தியாகத் திருநாளாம் புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் எதிர்வரும் புதன்கிழமை (21)  பெருநாள் தினத்தில் காலை 10.05 க்கு பன்பலை 102.1 Mhz, 102.3Mhz இல்   ஹஜ் பெருநாள் கவியரங்கத்தை வழங்கிறது.

இந்தக் கவியரங்கிற்கு எழுத்தாளர், கவிஞர்  நாச்சியாதீவு பர்வீன் தலைமை தாங்குகிறார். அவரின் தலைமையில் இளம் கவிஞர்களான கல்முனை அறூபா அஹ்லா, கெக்குனுகொல்ல சப்ராஸ் அபூபக்கர், கிண்ணியா நஸார் இஜாஸ், அநுராதபுரம் சீமா சைரீன், புத்தளம் - ஏத்தாலை சவ்துன் நிசா ஆகியோர் பங்கு கொள்கின்றனர். 

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை தொடர்ந்தும் இவ்வாறான நிகழ்வுகளை முன்னெடுத்து செயற்படுவது பாராட்டுக்குரிய விடயமாகும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.